அதிமுகவில் அனைத்து ஊராட்சி கழக செயலாளர் பொறுப்புகள் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதிமுக கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரக்கூடிய மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய கழக அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வந்த அனைத்து ஊராட்சி கழக செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அதிமுக தலைமை அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பிற்கான காரணம் என்றவென்று குறிப்படாத நிலையில், அடுத்தக்கட்டமாக தேர்தலுக்கு தயாராவதற்கான ஒரு முன்னோட்டம் நடவடிக்கையாக இதை பார்க்கப்படுகிறது. 

அதேபோல், அனைத்து பொறுப்புகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், ஊராட்சி கழக செயலாளராக பணியாற்றி வந்த அனைவருக்கும் விரைவில் மாற்று பொறுப்பு வழங்கப்படும் என்பதையும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வரக்கூடிய தேர்தலை மையமாக வைத்து இந்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கட்சியில் ஊராட்சி  கழக செயலாளராக இருந்தவர்களுக்கு மாற்று பொறுப்பு வழங்கப்படும் போது புதிய உத்தேகத்துடன் அடுத்து மாநகராட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியிருப்பதாகவே தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.