All castes have to be priest

தமிழக கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றும், ஆகம பயிற்சி பெற்ற அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவதே சமூக நீதியாகும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கெயில் திட்டத்தை, மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

விவசாயிகள் நலனுக்காக தேசிய நெடுஞ்சாலையில் குழாய் செல்லும் வழிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார். 

தமிழக கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். ஆகம பயிற்சி பெற்ற அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவதே சமூக நீதியாகும் என்றும் அதில் கூறியுள்ளார்.

மேலும், கேரளாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது என்றும் ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

2006 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களில் ஆகம பயிற்சி நிலையம் உருவாக்கப்பட்டது.

ஆனால், திமுக அரசின் சட்டத்தை அதிமுக செயல்படுத்தவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க மனம் இல்லாத அரசு தமிழகத்தில் ஆட்சி செய்கிறது என்றும் கேரள அரசிடம் இருந்து தமிழக அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், அதிமுக அரசு அலட்சியமாக இருந்தால் திமுக களம் காணும் என்றும் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.