Asianet News TamilAsianet News Tamil

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்... ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம்..!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவை வன்மையாக கண்டிக்கிறேன் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

All castes can become priests ... Srivilliputhur jiyar condemned ..!
Author
Tamil Nadu, First Published Aug 21, 2021, 4:42 PM IST

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவை வன்மையாக கண்டிக்கிறேன் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், ’’தமிழக அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அறிவித்துள்ளதற்கு எங்களின் கண்டனத்தை தெரிவிக்கிறோம். ஹிந்துக் கோயில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற வேண்டும். பாரம்பரிய முறைகளை மாற்றுவது தமிழக அரசுக்கு நல்லது கிடையாது. எனவே, இந்த ஆணையை தமிழக அரசு நீக்க வேண்டும். பாரம்பரியம் மாறாமல் பூஜைகள் நடை பெறுவதற்கு இந்த திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்து உத்தரவு போடுவார் என நம்புகிறோம். கோயில்களில் ஆகமவிதிப்படி பூஜை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. கோயில் நடைமுறைகளை மாற்றக்கூடாது எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.

 All castes can become priests ... Srivilliputhur jiyar condemned ..!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் 1970-ல் சட்டம் கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அதேபோல இந்துவாக பிறந்து தகுந்த பயிற்சி முடித்த யாரும் அர்ச்சகராகலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios