ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கான சின்னங்கள் ஒதுக்கேடு நிறைவு பெற்றதாக தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சசிகலா தரப்பில், டி.டி.வி.தினகரனும், ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் தீபாவும், பா.ஜ.க சார்பில் கங்கை அமரனும் உள்ளிட்ட 62 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில், சசிகலா தரப்பும், ஒ.பி.எஸ் தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டி போட்டதால் சின்னம் முடக்கபட்டது. இதையடுத்து தினகரனுக்கு தொப்பி சின்னமும், மதுசூதனனுக்கு மின்கம்பம் சின்னமும் ஒதுக்கபட்டது.

இதைதொடர்ந்து ஆர்.கே.நகரில் இருதரப்பினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு படகு சின்னத்தை ஒதுக்குவதாக தேர்தல் அதிகாரி அர்வித்தார்.

இந்நிலையில், தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

ஆர்.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சைகளுடன் சேர்ந்து 62 பேர் போட்டியிடுகின்றனர்.

அதில் 6 பேர் தேசிய மற்றும் மாநில கட்சியை சேர்ந்தவர்கள். 5 பேர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள். 51 பேர் சுயேட்சை வேட்பாளர்கள்.

பாரபட்சம் இன்றி வரிசை படி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையின் இறுதி பட்டியல் இன்று இரவுக்குள் வெளியிடப்படும்.

சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு முழுவதும் நிறைவு பெற்று விட்டது.

22 குழுக்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இவ்வாறு அவர் தெரிவித்தார்.