Asianet News TamilAsianet News Tamil

வரும் 7 ஆம் தேதி வரை ரொம்ப எச்சரிக்கையா இருக்க அலர்ட்.. எப்போது வேண்டுமானாலும் அடித்து நொறுக்கும் என தகவல்.

06.11.2021: நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு   இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Alert to be very alert until the 7th .. Information that will be smashed at any time.
Author
Chennai, First Published Nov 3, 2021, 4:46 PM IST

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 

03.11.2021: (ஆரஞ்சு எச்சரிக்கை) டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சேலம் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு   இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும், 04.11.2021: டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு   இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
 
05.11.2021: டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு   இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வடமாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Alert to be very alert until the 7th .. Information that will be smashed at any time.

06.11.2021: நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு   இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

07.11.2021: தென் மாவட்டங்களில் ஓரிரு   இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பேராவூரணி (தஞ்சாவூர்), அதிராமபட்டினம் (தஞ்சாவூர்), மலையூர் (புதுக்கோட்டை) தலா 17,புவனகிரி (கடலூர்) 14, நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 13,தொழுதூர் (கடலூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்) தலா 12, பெருங்களூர் (புதுக்கோட்டை), காரைக்கால் (காரைக்கால்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), கீழ அணைக்கட்டு (தஞ்சாவூர்) தலா 11, எறையூர் (பெரம்பலூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), அகரம் சீகூர் (பெரம்பலூர்), குப்பநத்தம் (கடலூர்), கடவனூர் (கள்ளக்குறிச்சி) தலா 10, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), கொத்தவாச்சேரி (கடலூர்), லக்கூர் (கடலூர்), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), மெ.மாத்தூர் (கடலூர்), கீழச்செருவை (கடலூர்) தலா 9, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), தொண்டி (ராமநாதபுரம்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), திருவாரூர் (திருவாரூர்), கே.எம்.கோயில் (கடலூர்), நாகுடி (புதுக்கோட்டை), ஆழியார் (கோவை), வானமாதேவி (கடலூர்) தலா 8, வேப்பூர் (கடலூர்), பஞ்சப்பட்டி (கரூர்), விருதாச்சலம் (கடலூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), சிதம்பரம் (கடலூர்), பாலவிடுதி (கரூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), சிதம்பரம் , (கடலூர்) மகாபலிபுரம் (செங்கல்பட்டு), வானூர் (விழுப்புரம்), நன்னிலம் (திருவாரூர்) தலா 7,

Alert to be very alert until the 7th .. Information that will be smashed at any time.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

03.11.2021 முதல் 05.11.2021 வரை: கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 06.11.2021,07.11.2021: தென்கிழக்கு அரபிக் கடல், வடக்கு கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios