Asianet News TamilAsianet News Tamil

இனி கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே சரக்கு... மதுக்கடைகளில் வந்தது கட்டுப்பாடு..!

மது வாங்க செல்பவர்களுக்கு எந்த நிபந்தனையும் கிடையாது என்பது வேடிக்கையாக உள்ளது. எனவே மது வாங்க செல்பவர்களுக்கும் நிபந்தனைகளை கடுமையாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 

Alcohol is now available only to those who have been vaccinated against corona ... came control
Author
Kerala, First Published Aug 12, 2021, 11:19 AM IST

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் கேரளாவில் இன்று முதல் மது வாங்க வருபவர்கள் RT-PCR நெகடிவ் சான்றிதழ் மற்றும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அவசியமாக்கப்பட்டுள்ளது.

 Alcohol is now available only to those who have been vaccinated against corona ... came control

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். நெகடிவ் சான்றிதழ் அல்லது கொரோனா பாதித்து ஒரு மாதத்துக்கு மேலானவர்கள் மட்டுமே கடைகளுக்கு செல்ல வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டது. ஆனால், மது வாங்க செல்பவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. Alcohol is now available only to those who have been vaccinated against corona ... came control

இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிமன்றம் கடைகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்பவர்களுக்கு மட்டும் நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. ஆனால் மது வாங்க செல்பவர்களுக்கு எந்த நிபந்தனையும் கிடையாது என்பது வேடிக்கையாக உள்ளது. எனவே மது வாங்க செல்பவர்களுக்கும் நிபந்தனைகளை கடுமையாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. Alcohol is now available only to those who have been vaccinated against corona ... came control

இதையடுத்து இன்று முதல் கேரளாவில் மதுக்கடைகளுக்கு செல்பவர்களுக்கும் தடுப்பூசி உள்ளிட்ட நிபந்தனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல்டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், ஆர்.டி.பி.சி.ஆர். நெகடிவ் சான்றிதழ் உள்ளவர்கள், கொரோனா வந்து ஒரு மாதத்துக்கு மேலானவர்கள் மட்டுமே மது வாங்க கடைக்கு செல்ல வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios