Asianet News TamilAsianet News Tamil

அய்யோ... சிவனையே இழிவுபடுத்திட்டீங்களா.?? ருத்ரதாண்டவன் ஆடும் அண்ணாமலை.

தமிழ் கலாச்சாரத்தை இழிவு படுத்துபவர்களை தமிழக அரசு அனுமதிக்கிறதா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது தில்லை நடராஜரின் நடனத்தை யூடூ புரூட்டஸ் என்ற யூடியூப் சேனலில் இழிவு படுத்தி விட்டதாக தொட்ர்ந்து பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கண்டித்து வருகின்றனர். 

Alas did you insult Shiva? Annamalai  Rudrathanthavam against dmk government.
Author
Chennai, First Published Apr 29, 2022, 6:59 PM IST | Last Updated Apr 29, 2022, 7:06 PM IST

தமிழ் கலாச்சாரத்தை இழிவு படுத்துபவர்களை தமிழக அரசு அனுமதிக்கிறதா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது தில்லை நடராஜரின் நடனத்தை யூடூ புரூட்டஸ் என்ற யூடியூப் சேனலில் இழிவு படுத்தி விட்டதாக தொட்ர்ந்து பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த யூடியூப் சைனலில் நடராஜரின் நடனத்தை இழிவு படுத்தி பேசிய யூடியூப்பர் மைனர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காட்டமாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

புகழ்மிகு நோபல் பரிசு பெற்ற அமெரிக்க  இயற்பியலாளர்  டாக்டர் பிரிட்ஜாப் காப்ரா 1975ஆம் ஆண்டு உலகமே வியக்கும் புதிய தத்துவத்தை தன் புத்தகத்தில்  தந்தார் இந்தப் புத்தகம் இப்போது உலகம் முழுவதும் 23 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. சிவபெருமானின் பிரபஞ்ச நடனத்துடன் துணை அணுத் துகள்களின் தாள துடிப்பை காப்ரா அறிவியல் ரீதியாக இங்கே இணைக்கிறார். ஒவ்வொரு துணை அணுவின் நகர்வும் ஒரு இயக்கம், துடிப்பு மட்டுமல்ல ஒரு ஆற்றல் நடனம் என்றே அவர் வலியுறுத்துகிறார். முடிவில்லாமல் உருவாக்கம் மற்றும் அழிவின் துடிக்கும் செயல்முறை 

Alas did you insult Shiva? Annamalai  Rudrathanthavam against dmk government.

நவீன இயற்பியலாளர்களுக்கு அவர் சொல்வது சிவனின் நடனமும் துணை  அனுவின் நடனமும் ஒத்திருக்கிறது. இந்து தொன்மவியல் பேசும் தாண்டவம் முழு பிரபஞ்சத்தையும் உண்டாக்கிய உருவாக்கம் மற்றும் அழிவின் தொடர்ச்சியான நடனம் மற்றும் அனைத்து இயற்கை நிகழ்வுகளின் அடிப்படை என்று அவர் கூறுகிறார். நவீன இயற்பியல்  தத்துவத்தில் தொடர்ந்து நடனம் ஆடுவது மற்றும் அதிர்வுறும் இயக்கம் பிரபஞ்சத்தின் இயக்கமாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன என்று நடன தத்துவத்தை விளக்குவதோடு நில்லாதே சிதம்பரம் நடராஜரை நேரில் வந்து தரிசித்தும் வியந்துள்ளார்

அமெரிக்க இயற்பியல் ஆய்வாளர் டாக்டர் பிரிட்ஜாப் காப்ரா.  நடராஜரின் தாண்டவத்தை அணுமின் இயக்கத்தோடு ஆய்வு செய்வதோடு நில்லாமல் மிகப்பெரிய நடராஜர் சிலையை ஜெனிவாவில் அமைத்துள்ள European organisation for nuclear research என்ற CERN கட்டிடத்தின் வாயிலில் ஒரு நடராஜர் சிலையையும் வடிவமைத்துள்ளார்.  தமிழ் மொழி மதம் நம்பிக்கை சாராத அணுமின் ஆய்வாளர்களின் பார்வைக்கு, நம் திராவிட மாடலின் கீழ்த்தரமான பார்வைக்கும் எத்தனை வித்தியாசம். அவனின்றி ஓரணுவும் அசையாது என்ற திருமூலரின் திருவாக்கை கொண்டாடும் தமிழினம், ஈசனின் அற்புத தாண்டவத்தை பாரத திருநாட்டின் பாரம்பரிய தத்துவத்தை பெரிதும் போற்றி மதிக்கிறோம்.

கீழ்த்தரமான சிந்தனைகளால் ஆளும் கட்சியின் ஆதரவுடன் இது போன்ற தமிழ் மக்களின் மத நம்பிக்கைகளை சிதைப்பதை அவமானப் படுத்துவதை தமிழக அரசு எப்படி தொடர்ந்து அனுமதிக்கிறது. மதக் கோட்பாடுகள் மற்றும் இறைநம்பிக்கையை அவதூறாக பேசி மக்களின் நம்பிக்கையை அவமதிப்பது ஏன் திராவிட மாடலாக சிலர் கொண்டுள்ளனர். பரபரப்புக்காகவும், விளம்பரத்திற்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தொடர்ந்து இழிவுபடுத்துவது தொழிலாக கொண்டு செயல்படுபவர்களை இந்த அரசு அனுமதிக்கிறதா? மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிப்பவர்கள் எப்படி காவல்துறையால் கைது செய்யப்படாமல் துணிச்சலாக தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

Alas did you insult Shiva? Annamalai  Rudrathanthavam against dmk government.

ஆளும் கட்சியின் ஆசி இருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இது போன்ற அவதூறுகளை கண்டுகொள்ளாமல் அரசு ஏன் கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறது. நடவடிக்கை எடுக்க தேவையான காலம் அவகாசம் கடந்த பின்னும் ஆளும் அரசு செயல்பட மறுப்பது ஏன். அல்லது இச்சமூகத்தில் சகிப்புத்தன்மையை கண்டறிய இது நீங்கள் தேர்ந்தெடுத்த வழியா? தவறு செய்தவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் . அரசு உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களின் வாழ்வியலோடு கலந்திருக்கும் தெய்வீகத்தை அவமதிப்பதை பாரதிய ஜனதா கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios