Asianet News TamilAsianet News Tamil

ஆலங்குளம் கள நிலவரம்..! பூங்கோதை VS மனோஜ் பாண்டியன்..! வெற்றி யாருக்கு?

தென்காசி தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக இருப்பவர் பூங்கோதை ஆலடி அருணா. இவர் கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர். அப்போதே தொலைபேசி உரையாடல் லீக் ஆகி அமைச்சர் பதவியை பறிகொடுத்தவர். 

alangulam constituency...Manoj Pandian vs Poongothai Aladi Aruna...Who wins?
Author
Thirunelveli, First Published Apr 4, 2021, 12:25 PM IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு முன்னிலை பெற்றுத் தந்துள்ளது.

தென்காசி தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக இருப்பவர் பூங்கோதை ஆலடி அருணா. இவர் கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர். அப்போதே தொலைபேசி உரையாடல் லீக் ஆகி அமைச்சர் பதவியை பறிகொடுத்தவர். ஆனால் திமுக மேலிடத்தில் உள்ள தொடர்பு காரணமாக கடந்த முறை எம்எல்ஏ சீட் வாங்கி வெற்றி பெற்றவர் தற்போதும் சீட் பெற்று திமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். தொகுதியில் திமுக கட்சிக்காரர்கள் மத்தியில் மட்டும் அல்ல பூங்கோதையின் குடும்பத்தில் கூட அவருக்கு துளியும் ஆதரவு இல்லை.

alangulam constituency...Manoj Pandian vs Poongothai Aladi Aruna...Who wins?

பூங்கோதைக்கு தயவு செய்து வாக்களிக்காதீர்கள் அவள் எந்த நல்லதும் செய்யமாட்டா, அவள் ஏராளமான நிலத்தை வளைத்துப்போட்டு வைத்திருக்கா என்று பூங்கோதையை பெற்ற தாயே வெளியிட்டுள்ள வீடியோ தொகுதியில் அவருக்கு வெற்றி வாய்ப்பை சுத்தமாக கெடுத்துவிட்டது. இதே போல் திமுக பிரமுகர்கள் தரப்பில் இருந்தும பூங்கோதைக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் எம்எல்ஏவாக இருந்தாலும் சென்னையில் தான் பூங்கோதை வசித்து வருகிறார். திமுக மேலிடத்துடன் மட்டும் தொடர்பு வைத்துக் கொண்டு தேர்தல் நேரத்தில் சீட் வாங்கிவிட்டு மாவட்டத்திற்கு வருவதால் அவர் மீது அங்கு பெரிய அதிருப்தி நிலவுகிறது.

alangulam constituency...Manoj Pandian vs Poongothai Aladi Aruna...Who wins?

தேர்தல் சமயத்தில் மட்டும் கட்சி விழாக்களில் கவனம் செலுத்தும் பூங்கோதைக்கு கடந்த முறை கடும் எதிர்ப்பு எழுந்தது. இதே போல் அண்மையில் தேவேந்திர குல வோளாளர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்ல பூங்கோதைககு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவரால் அந்த பகுதியில் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. இப்படி தொகுதியில நிலவும் பலத்த எதிர்ப்பால் பூங்கோதை இந்த முறை கரை சேருவது கடினம். அதே சமயம் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் எவ்வித பகட்டும் இல்லாமல் மிக எளிதான முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

alangulam constituency...Manoj Pandian vs Poongothai Aladi Aruna...Who wins?

அதிமுகவினர் மத்தியில் அவருக்கு நல்ல ஆதரவு உள்ளது. இதனால் வேட்பாளர் இல்லாமலேயே தொகுதி முகுவதும் கட்சிக்காரர்கள் தாங்களாகவே சென்று மனோஜ் பாண்டியனுக்கு வாக்கு சேகரிக்கிறார்கள். இது தவிர மனோஜ் பாண்டியன் குடும்பத்திற்கு என்று தொகுதியில் உள்ள செல்வாக்கு அவருக்கு கூடுதல் பலம்.  இது தவிர தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமுதாய மக்கள் மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கிராமம்வாரியாக உள்ள நாடார் அமைப்புகளும், உறவின் முறைகளும் கூடி மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக கூறுகிறார்கள்.இதனால் ஆலங்குளம் தொகுதியில் கடைசி நேரத்தில் நிலவரம் மாறி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் முன்னிலைக்கு வந்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios