திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததில் இருந்தே அக்கட்சிக்கு எதிராக முக.அழகிரி பேசி வருகிறார். கருணாநிதி இறந்த மூன்றாவது நாளே அவரது சமாதியில் பேட்டி அளித்த அழகிரி தன்னுடன்தான் திமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என கொளுத்திப் போட்டார்.

மேலும் கருணாநிதி மறைந்த 30 ஆவது நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி அதாவது நாளை சென்னையில் லட்சம் பேர் பங்கேற்கும்  பேரணி ஒன்றை நடத்த்ப் போவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந் 28 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் எந்தவித எதிர்ப்பும் இன்று ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்படடார்.

அதே நேரத்தில் மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் பேரணி நடத்துவது குறித்து அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். அப்படி சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள தயார் எனவும் தெரிவித்தார்.

ஆனால் இது எதையுமே ஸ்டாலின் கண்டு கொள்ளவிலலை. இதையடுத்து நாளை பேரணி உறுதியாக நடைபெறும் என அழகிரி அறிவித்தார். இந்நிலையில் சென்னை முழுவதும் இன்று அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி கலக்கி வருகின்றனர்.

சென்னையில் எங்கு திரும்பினாலும் ஒரே அழகிரி வால்போஸ்டர் மயமாக காட்சி அளிக்கிறது.  “ உத்தரவு உங்களது உடனடி பணி எங்களது “ என அதிரடியாக பல வாசகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன, சென்னை மட்டுல்லாமல் மதுரை உள்ளிட்ட பல நகரங்களில்  இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன