Asianet News TamilAsianet News Tamil

செக் வைக்கும் அகிலேஷ் யாதவ்... சாதிய சதிகளை முறியடிப்பாரா யோகி... உ.பி.,யில் வாழ்வா..? சாவா யுத்தம்..!

முக்கிய இந்துத்துவ முகமான ஆதித்யநாத்தின் விருப்பத் தொகுதியாகவும் அயோத்தி கருதப்பட்டது. ஆனால் பாஜக மேலிடம் யோகிக்கு கோரக்பூரை ஒதுக்கி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

Akhilesh Yadav to check... Will Yogi foil caste conspiracies... Life in UP..? Sava War..!
Author
utterpradesh, First Published Jan 17, 2022, 3:21 PM IST

உத்தர பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரசாரம் அங்கு சூடுபிடிக்க கிளம்பி இருக்கிறது. 

அயோத்தி, மதுரா மற்றும் கோரக்பூர் தொகுதிகளில் யோகி ஆதித்யநாத் பல முறை வெண்ரு இருக்கிறார். இந்நிலையில் இம்முறை அயோத்தில் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டது . ஆனால் அவருக்கு கோரக்பூர் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. முக்கிய இந்துத்துவ முகமான ஆதித்யநாத்தின் விருப்பத் தொகுதியாகவும் அயோத்தி கருதப்பட்டது. ஆனால் பாஜக மேலிடம் யோகிக்கு கோரக்பூரை ஒதுக்கி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், யோகி ஆதித்யநாத் அங்கு களமிறக்கப்பட்டிருந்தால் இந்துத்துவா திட்டத்தை பலப்படுத்த ஏதுவாக இருந்து இருக்கும். முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ.க., ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டமாக தேர்தல் நடக்கிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான அங்கு சட்டசபை தேர்தல் முடிவு தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் அந்த மாநில தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.Akhilesh Yadav to check... Will Yogi foil caste conspiracies... Life in UP..? Sava War..!

2017ல்  இங்கு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது அங்கு பா.ஜ.க.,வுக்கு சாதகமான அலை வீசியது என்பதை விட, ஆட்சியில் இருந்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசுக்கு எதிரானஅலை வீசியது என்பதே உண்மை. பிரதமர் மோடி மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை, அமித் ஷாவின் சாமர்த்தியமான வியூகம் ஆகியவற்றால் 2017ல் நடந்த தேர்தல் பா.ஜ.க.,வுக்கு வெற்றி எளிதாக வசமானது.  

ஆனால் இம்முறை பா.ஜ.க,வுக்கு சட்டசபை தேர்தல் முள் மெத்தையை போலாகி விட்டது. பா.ஜ.க., தரப்பில் மாநிலத்தின் வளர்ச்சி, அயோத்தி ராமர் கோவில், வாரணாசியில் ஏற்பட்டுள்ள மாற்றம், பெரிய அளவில் கலவரம் நடக்காதது போன்ற சாதனைகள் கூறப்படுகின்றன. ஆனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் உத்தரப்பிரதேசத்தில் ஜாதி ரீதியான ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கின்றன. ஆதித்யநாத் அரசுக்கு எதிராக இதர பிற்படுத்தப்பட்டோரை ஒன்று சேர்க்கும் முயற்சியில் சமாஜ்வாதி கட்சி ஈடுபட்டுள்ளது. Akhilesh Yadav to check... Will Yogi foil caste conspiracies... Life in UP..? Sava War..!

இந்த முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக ஆதித்யநாத் அமைச்சரவையிலிருந்து இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்துவிட்டு சமாஜ்வாதியில் இணைந்துள்ளனர்.

யாதவர்களின் கட்சி எனக் கூறப்படும் சமாஜ்வாதிக்கு இவர்களது வருகையால் பலம் கிடைத்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோரிடம் தன் செல்வாக்கை அதிகரிக்க இது உதவும் என, அகிலேஷ் நம்புகிறார். யாதவர்கள், முஸ்லிம்கள் ஓட்டுகளை நம்பி எப்போதும் களமிறங்கும் சமாஜ்வாதி, இம்முறை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்தோரின் ஓட்டுகளும் கிடைக்கும் என நம்புகிறது. மாநிலத்தில் மொத்த வாக்காளர்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் 50 சதவீதத்துக்கு மேல் உள்ளனர். இவர்களில் யாதவர்கள் 9 சதவீதத்துக்கு மேல் உள்ளனர். ஆகையால், யாதவர் அல்லாதவர்களின் 35 சதவீத ஓட்டுகளை பெற அனைத்து கட்சிகளும் குறிவைக்கின்றன. 

விவசாயிகள் தரப்பில் செல்வாக்கு மிக்க ராஷ்ட்ரீய லோக் தளத்துடன் கூட்டணி அமைத்துள்ள சமாஜ்வாதி, இதர பிற்படுத்தப்பட்டோரில் உள்ள சாதிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் முயற்சித்து வருகிறது. இந்த வியூகம் தேர்தலில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

ஆனாலும் பாஜகவின் பார்வையோ வேறு மாதிரி இருக்கிறது. 2014 மக்களவை தேர்தல், 2017 சட்டசபை தேர்தல், 2019 மக்களவை தேர்தல்களில் பா.ஜ.க., வெற்றி பெற்றதற்கு இதர பிறப்படுத்தப்பட்ட பிரிவினர் அளித்த ஆதரவு தான் காரணம் என்பதை மறுக்க இயலாது. இதை பா.ஜ.க.,வும் உணர்ந்துள்ளது. 100க்கும் அதிகமான பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்தவர்கள். கட்சியின் மாநில நிர்வாகிகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்தவர்கள்.

16 சதவீதம் பேர் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர். துணை முதல்வர் மவுர்யா இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். இதனால் இதர பிற்படுத் தப்பட்டோரின் ஆதரவு தங்களுக்கு தங்களுக்கு இப்போதும் கிடைக்கும் என பா.ஜ.க., முழுமையாக நம்புகிறது.Akhilesh Yadav to check... Will Yogi foil caste conspiracies... Life in UP..? Sava War..!

உத்தர பிரதேச மாநில துணை முதல்வரும், பா.ஜ.க., மூத்த தலைவருமான மவுர்யா இதுகுறித்து கூறுகையி, ‘’உத்தர பிரதேசத்தில் கடந்த முறை பெற்ற வெற்றியை விட இம்முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்க வைக்கும். ஜாதி அரசியலை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என அகிலேஷ் கனவு காண்கிறார். அது நடக்காது. ஐந்து ஆண்டு கால ஆட்சியில் பல சாதனைகளை செய்துள்ளோம். பா.ஜ.க, ஆட்சி மீது இதுவரை எதிர்க்கட்சிகளால் எந்த ஊழல் குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லை. கட்சியிலிருந்து விலகியவர்கள் ஏற்கனவே வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் தான். 

தொகுதி பணிகளை சரியாக செய்யாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இதை அறிந்து தான் கட்சியிலிருந்து சிலர் விலகியுள்ளனர். இவர்களில் பலர் வாரிசு அரசியல் நடத்தியவர்கள். தேர்தல்களில் தங்கள் வாரிசுகளுக்கு பா.ஜ.க., மேலிடம் சீட் தராது என தெரிந்ததால், இவர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். இது மக்களுக்கும் தெரியும்’’ எனத் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios