ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு... அறிவித்தது அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம்!!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னை ராயபுரத்திலுள்ள தலைமை நிலையத்தில் அகில இந்திய கட்டிடத்தொழிலாளர்கள் மத்திய சங்கம் செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: தேர்தல் அறிவிப்புக்கு முன்பே முந்திக் கொண்ட பாஜக; ஆந்திரா, தெலுங்கானா தேர்தலுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
இந்த கூட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் பிள்ளைகளின் படிப்புக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் உடன் பேச்சு.! ஈரோட்டில் என்ன நடக்குது? திருப்பி அடித்தால் அடிப்போம்.! திமுகவை இறங்கி அடித்த அண்ணாமலை
அவரது வெற்றிக்கு பாடுபடுவது, கட்டுமான தொழிலாளர்களுக்குபென்சன் உதவி தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து மூவாயிரமாக உயர்த்தி தர வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ராயபுரம் பி.கோபிநாத், இ.பரமானந்தம், எம்.ஆறுமுகம் இ.குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.சி.துரைவேலு, கே.நாகராஜ், எம்.ராஜேந்திரன், சி.நிர்மலா, கன்னியப்பன, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.