ஓபிஎஸ் உடன் பேச்சு.! ஈரோட்டில் என்ன நடக்குது? திருப்பி அடித்தால் அடிப்போம்.! திமுகவை இறங்கி அடித்த அண்ணாமலை

1998 இல் கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி கோவை RS புரம் பகுதியில் நடைபெற்றது.

Tn bjp president annamalai slams dmk govt

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ வானதி, பொருளாளர் சேகர், மாநில பொது செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இந்த நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் என்ற முழக்கத்துடன் கூட்டம் நடைபெற்றது.

அப்போது மேடையில் பேசிய அண்ணாமலை, தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 25 ஆண்டுகள் கழிந்துள்ளது. பலர் சொந்தங்களை இழந்து தவித்தனர். இறந்தவர்களுக்கு ஒரு நினைவு தூண் கூட இல்லை. இதனை மறக்க வேண்டும் என அரசு நினைத்து இன்று வரை வைக்கவில்லை.

Tn bjp president annamalai slams dmk govt

இதையும் படிங்க..விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா.? சீமான் என்ன சொன்னார் தெரியுமா.!

அத்வாணி வருவதற்கு தாமதமானதால் அன்று தப்பினார். இறந்தவர்களுக்கும், கோவை வடுவூக்கும் மருந்தாக தூண் இருந்திருக்க வேண்டும்.பாஜக நிச்சயம் ஆட்சியில் அமரும். அப்போது கோவையில் நினைவு தூண் அமைப்போம் என அரசுக்கு செய்தியாக சொல்லிக் கொள்கிறோம்.நாகாலாந்து உள்ளிட்ட பகுதிகளில் குண்டு வெடிப்புகளில் இறந்தவர்களுக்கு நினைவு தூண் உள்ளது. இந்து பண்டிகைகளை குறி வைத்து குண்டுகள் வெடிக்கின்றன.

2014 இல் மோடி பொறுப்பு ஏற்ற பிறகு ஏதாவது பொது மக்கள் நடமாடும் இடத்தில் குண்டு வெடித்தது உண்டா? 2014 -2023 வரை மோடி ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு. 2019 ஐ ஒப்பீடுக்கையில் 2022 இல் கோவை உள்ளிட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு. 2022 இல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் மக்கள் இறப்பை கோட்டை ஈஸ்வரன் காத்தார். முபின் பஜ்ஜி போட்டு கொண்டு இருந்த போது சிலிண்டர் வெடித்தது என்று கூறியது போல அரசின் பதில்கள் இருந்தது. NIA அறிக்கை தாக்கல் செய்யும் போது திமுக வின் ஆட்சியின் நிலை குறித்து தெரியும். திமுக ஆட்சிக்கு இந்தியா அல்ல, தமிழ் நாட்டு மக்கள் மீது கூட பாசம் இல்லை.

கோவையில் நடந்த கொலையில் துப்பாக்கி பயன்படுத்தப் பட்டதை காவல்துறை மறைக்கிறது. மும்பையில் இருந்து இறங்கிய கும்பல் ஒருவரை துரத்தி, அவர் வீட்டிற்குள் புகுந்து தப்ப முற்பட்ட போது வாய்க்குள் துப்பாக்கி வைத்து சுட்டுள்ளனர். ரவுடிகள் கூட திமுக அரசை கண்டு பயப்படுவதில்லை. முகக்கவசம் கூட இல்லாமல் துணிச்சலாக செய்கிறார்கள். கொலை குற்றவாளிகள் சீக்கினால் திமுக ஒன்றிய செயலாளர்களிடம் சென்று தப்பிக் கொள்வார்கள்.

 உண்மையாகவே போலீஸ் அகாடமி பயிற்சி பெற்று உள்ளீர்களா? தேசிய கொடியின் மீது சத்தியம் செய்து உள்ளீர்களா? மாநகர காவல்துறை ஆணையருக்கு கேள்வி எழுப்பினார். பங்களாவில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். எங்களுக்கு அன்றாடம் காட்சிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கணும். காவல்துறை மீது எங்களுக்கு கோபம் இல்லை. காவல்துறையின் முன் கள பணியாளர்கள் constable களுக்காக நாங்கள் பேசுகிறோம்.எவ்வளவு மெடல் களை நீங்களே உங்களுக்கு கொடுத்தாலும் உள்துறையில் திமுக தோல்வியே.

Tn bjp president annamalai slams dmk govt

இதையும் படிங்க..உலகளவில் காற்று மாசுபட்ட நகரங்களில் இடம்பிடித்த டெல்லி - மற்ற இந்திய நகரங்கள் எப்படி.? முழு விபரம் உள்ளே!!

அடித்தால் திருப்பி அடிக்கும் பாணியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. அதனால் தான் புல்வாமா உள்ளிட்ட விவகாரங்களில் பதிலடி கொடுக்க முடிந்தது. பாதுகாப்பு துறைக்கு சுதந்திரம் கொடுப்பது மோடி அரசும் ஆனால் திமுக ஆட்சியில் முதல்வர் குறித்து விமர்சிப்பவர்களை மட்டும் காவல்துறை கைது செய்கிறது. சும்மா இருந்தால் கூட அரசியல் பேச வேண்டும், காஷ்மிர் அமைதி குறித்து, மோடி ஆட்சி குறித்து, நல்ல அரசியலை பேச வேண்டும் என்று கூறினார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அண்ணாமலை. அப்போது,  தமிழ் நாட்டில் கையூட்டு வாங்கும் அதிகாரிகள் தொடர்பாக பட்டியலை வாசித்து  பேச தொடங்கிய அண்ணாமலை, 10 மாத காலமாக 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பதிவாளர்கள் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குகிறார்கள். 15 நாட்களுக்குள் நடவடிக்கை இல்லை எனில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் புகைப்படம் கொண்டு போஸ்டர் அடிப்போம்.

ஈரோட்டில் ஒபிஸ் உடன் பொது கூட்டம் நடப்பது தொடர்பாக கட்சி மேலிடம் முடிவு செய்யும். காங்கிரஸ் தான் போட்டி போட்டு ஆட்சிகளை கலைத்தவர்கள். பிரபாகரன் குறித்த கேள்விக்கு இலங்கை அரசு சொல்லும் போது அரசாக ஏற்கலாம்..காதில் கேட்டதை வைத்து அரசு இயங்க முடியாது. கடந்த ஆண்டு நெடுமாறன் இலங்கைக்கு பிரச்னை தீர்வு என்றால் மோடியால் தான் முடியும் என்று கூறியதையும் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க..Coimbatore : கோவை கொலை சம்பவம்.. 2 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ் - பரபரப்பு நிமிடங்கள் !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios