Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் உடல்நிலை வேவு பார்க்க வந்தார்களா எய்ம்ஸ் மருத்துவர்கள்?? - சர்ச்சையை கிளப்புகிறார் சுதர்சன நாச்சியப்பன்

aiims doctors-spy-on-cm-in-apollo-sasy-sudharsana-nachi
Author
First Published Oct 9, 2016, 3:32 AM IST


முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 வது நாளாக  சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வரை காண  பல்வேறு எதிர்கட்சித்தலைவர்கள் அப்போலோ வந்து விசாரித்து வருகின்றனர்.

 முதல்வரின் உடல் நிலையை பயன்படுத்தி    மத்திய அரசு குழப்ப வேலைகளில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சியில் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் குற்றம் சாட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் மத்தியில் ஆளும் பாஜக அரசு முதல்வரின் உடல் நிலையை பயன் படுத்தி தொடர்ந்து நெருக்கடியை கொடுத்து வருகிறது என்றார்.

காவிரி பிரச்சனையில் முதல்வர் உடல் நலமில்லாததை பயன் படுத்தி தமிழக அரசுக்கு எதிரான நிலை எடுத்ததிலிருந்தே இதை அறித்து கொள்ளலாம் என்றார். முதல்வரின் நிலையை பயன்படுத்தி அதிமுகவுக்கு நெருக்கடியை கொடுக்க தீர்மானித்து விட்டனர் அதன் எதிரொலியாகத்தான் கவர்னர் மூலம் நெருக்கடி கொடுக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

aiims doctors-spy-on-cm-in-apollo-sasy-sudharsana-nachi

மோடியின் குரலே சுப்ரமணியம் சுவாமி என்று தெரிவித்த அவர் மோடி ஒரு காரியத்தை செய்ய வேண்டுமானால் அவருடைய முதல் குரலாக சுப்ரமணியம் சுவாமி ஒலிப்பார் அதைத்தான் ரிசர்வ வங்கி கவர்னர் விஷயத்தில் பார்த்தோம், நிதியமைச்சர் அருண்ஜெட்லி விஷயத்தில் பார்த்தோம், தற்போது தமிழக அரசுக்கு எதிராக குடியரசு தலைவர் ஆட்சியை கலைக்க வேண்டுமென சுப்ரமணியம் சுவாமி கூறி வருகிறார் இதுதான் பாஜகவின் எண்ணம் என்றார்.

இதே நிலையை அருணாச்சல பிரதேசத்தில் தாங்கள் அனுபவித்ததாகவும் அதை தடுக்கவே ராகுல் களம் இறங்கியுள்ளார் என்று தெரிவித்தார். முதல்வர் உடல் நிலையை வேவு பார்க்கவே எய்ம்ஸ் மருத்துவர்களை மத்திய அரசு அனுப்பி உள்ளது என்றார். 

aiims doctors-spy-on-cm-in-apollo-sasy-sudharsana-nachi

அதற்கு அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக செய்தி தொடர்பாளர் கே.டி.ராகவன் மறுத்தார். வேவு என்று கொச்சையாக சொல்கிறார் என்று ஆட்சேபம் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த சுதர்சன நாச்சியப்பன் வேண்டுமானால் ஆங்கிலத்தில் சொல்லலாமா , இண்டெலிஜெண்ட் என்றால் என்ன ஒற்று, உளவு என்ற வார்த்தைகள் பயான்படுத்தலாம் ஆனால் எல்லாம் ஒன்றுதான் என்றார். 

உளவுக்கு வரவில்லை என்றால் அப்போலோ மருத்துவமனை அழைத்து வந்தார்களா, அல்லது அதிமுக தலைமை கேட்டு கொண்டதன் பேரில் வந்தார்களா? இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த ராகவன் பிரதமருக்கு அப்படி அவசியமில்லை பிரதமருக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை உடல் நிலை பற்றிய தகவல் அனுப்பப்படும் ஆகவே வேவு பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றார்.                     

Follow Us:
Download App:
  • android
  • ios