Asianet News TamilAsianet News Tamil

இது கொடநாடு பிரச்சனையா? அந்த 47 நாட்கள்.. எடப்பாடி, CV சண்முகத்துக்கு தெரியும்.. போட்டு உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்

கடந்த முறை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

aidmk office issue edappadi palanisamy and cv shanmugam main reason said ops supporter bengaluru pugalenthi
Author
First Published Sep 7, 2022, 8:43 PM IST

கடந்த ஜூலை 11-ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார்.

aidmk office issue edappadi palanisamy and cv shanmugam main reason said ops supporter bengaluru pugalenthi

அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகளுக்கு..ஒன்றிணைவோம் வா.. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்.! எடப்பாடியா? பன்னீரா? குழப்பத்தில் ர.ரக்கள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் நேற்று கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  இன்று சிபிசிஐடி போலீசார் அதிமுக அலுவலகத்தில் சோதனை செய்தனர். இந்நிலையில் இன்று பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொதுக்குழு குறித்து இரண்டு நீதிபதிகள் அளித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக தலைமை கழக விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

aidmk office issue edappadi palanisamy and cv shanmugam main reason said ops supporter bengaluru pugalenthi

இந்நிலையில் நாளை அதிமுக அலுவலகத்திற்கு செல்வது என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். சிபிசிஐடி விசாரணை தொடங்கிய நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரை அதிமுக அலுவலகத்திற்கு அனுமதித்தால் சட்ட ஒழுங்கு சீர்கெடும். அலுவலகத்தில் ஏற்ப்பட்ட சண்டைக்கு சிபிஐ விசாரணை கேட்பதா ? இது என்ன கொடநாடு பிரச்சனையா ? அதிமுக அலுவலகம் 30 நாட்கள் வரை திறக்க வேண்டாம் என்ற தீர்ப்பை அடுத்த இதுவரை அலுவலகம் செல்லாத எடப்பாடி பழனிசாமி , சி.வி சண்முகம் 47 நாட்கள் கழித்து நாளை செல்வது ஏன் ? 

நீதிமன்றம் அதிமுக அலுவலகத்திற்கு யாரையும் செல்ல வேண்டாமென தீர்ப்பில் குறிப்பிடவில்லை. நீதிமன்றம் சாவியை வழங்கியதே எடப்பாடி பழனிசாமி அவர்களை வாட்ச்மேன் வேலையை பார்க்கத்தான் என நினைக்கிறேன். சட்ட ஒழங்கை காக்க வேண்டுமென்றால் தமிழக முதல்வர், அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல யாரையும் அனுமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று எடப்பாடி தரப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..அதிமுக அலுவலகத்தில் எடுக்கப்பட்ட அந்த பொருள் ? சிபிசிஐடி வெளியிட்ட முக்கிய தகவல் !!

Follow Us:
Download App:
  • android
  • ios