Asianet News TamilAsianet News Tamil

’’கருத்துக்கணிப்புகளை எல்லாம் அடித்து நொறுக்கி அதிமுக 140 இடங்களை வெல்லும்’’

இந்த முறையும் அதிமுக வெற்றிபெற்று முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆட்சியை அமைப்போம். அதிமுக 140 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும்

AIADMK will win 140 seats Says MR Vijayabhaskar
Author
Tamil Nadu, First Published Apr 22, 2021, 11:01 AM IST

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

"அந்த ரூம் பூட்டியிருக்கு.. ஆனால் ஏசி ஒர்க் ஆகுது.. சர்வர் ஆன்ல இருக்குன்னா என்ன அர்த்தம்?" என்று அரவக்குறிச்சியில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையம் குறித்து திமுக கரூர் வேட்பாளர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.. அத்துடன், கரூர் தொகுதியில் 28 மேசைகளை பயன்படுத்தி வாக்கு எண்ணிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் செந்தில்பாலாஜி கோரிக்கை விடுத்து இருந்தார்.

 AIADMK will win 140 seats Says MR Vijayabhaskar

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நடைப்பெற்று முடிந்த நிலையில் வரும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த சூழலில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூர், குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் தளவாபாளையத்தில் உள்ள எம்.குமாரசாமி தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள வாக்கு இயந்திரங்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.AIADMK will win 140 seats Says MR Vijayabhaskar

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரூர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில கன்டெய்னர் லாரி வருவதாக எதிர்க்கட்சியினர் கூறுவது பயத்தில் தான். கடந்த 2016 ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றிபெறாது என்று கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி அதிமுக வெற்றி பெற்றது. அதேபோல் இந்த முறையும் அதிமுக வெற்றிபெற்று முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆட்சியை அமைப்போம். அதிமுக 140 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும்”என நம்பிக்கை தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios