மத்திய அமைச்சர் விரிவாக்கத்தின் போது அதிமுக கண்டிப்பாக இடம் பெறும் என நம்புவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். 

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியிலுள்ள தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொழுகையில் பங்கேற்றார். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மத்திய அமைச்சரவையில் விரிவாக்கத்தின் போது அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கட்டாயம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அதிமுக தொண்டனாகத்தான் தான் இந்த கருத்தை கூறுவதாகவும் அதிமுகவின் அதிகாரபூர்வமான கருத்து அல்ல என்றும் கூறியுள்ளார்.