சசிகலா விடுதலையாகி வருவதை எங்கள் சமுதாயம் மற்றும் அதிமுகவில் இருக்க கூடிய உண்மையான விசுவாசிகள் வரவேற்பார்கள் என  முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். 

முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சி நிறுவன தலைவரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கைளில்;- அதிமுக - பாஜக கூட்டணி ஒன்றும் புதிதல்ல. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி, தற்போதும் தொடர்கிறது. அதிமுக என்பது முக்குலத்தோர் சமுதாய கட்சி என்ற அளவிற்கு இருந்து வருகிறது. வன்னியர் சமூகம் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு வருகிறது. இதுபோல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அனுபவமில்லாமல், பெண்கள் குறித்து தவறாக பேசி வரும், உதயநிதி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். முதன்முறை ஜெயயலிதா எனக்கு சீட் கொடுத்தார். நின்றேன்; வென்றேன். 2வது முறை மேலும் ஒரு சீட் கொடுங்கள். நாங்கள் வென்று காட்டுகிறோம். அப்போது தான், அடுத்த முறை மூன்றோ, நான்கோ பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும் என்றார். 

மேலும், சசிகலா விடுதலையாகி வருவதை எங்கள் சமுதாயம் மற்றும் அதிமுகவில் இருக்க கூடிய உண்மையான விசுவாசிகள் வரவேற்பார்கள். அவர் வருகையால் கட்சியில் பிரச்சனைகள் ஏற்படுமா? என்ற யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. ஒருவேளை சசிகலா அந்த கட்சிக்கு உழைத்தது உண்மையென்றால், நிச்சயமாக அவர்களை பிடித்தவர்கள் அவர்களுக்கு ஆதரவை கொடுப்பார்கள் என கூறியுள்ளார்.