டிடிவி தினகரன், அதிமுக கட்சி அலுவலகத்துக்கு செல்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று முன்னாள் எம்.பி. ரித்தீஷ் கூறியுள்ளார்.

சென்னை, பெசன்ட் நகரில், டிடிவி தினகரனை, முன்னாள் எம்.பி. ரித்தீஷ் நேரில் சந்தித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, எப்பாதும்போலு நாங்கள் தினகரனை பார்க்க வந்தோம். மற்றபடி எது குறித்தும் நாங்கள் பேசவில்லை. 

அதிமுக அலுவலகத்துக்கு தினகரன் செல்வது குறித்து இதுவரை இன்னும் முடிவெடுக்கவில்லை. கட்சி பலமாகத்தான் உள்ளது. ஆனால் தலைமை இல்லாமல்தான் தொண்டர்கள் தவித்து வருகின்றனர்.

பொது செயலாளர் சசிகலா சிறையில் இருப்பதால், தினகரன்தான் தலைமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். இரு அணிகளும் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் அனைவரின் விருப்பம். 

இவ்வாறு கூறினார்.