AIADMK to win and I have no connection with the split - only then draw with Deepa
அதிமுகவின் பிளவிற்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் என் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கலில் படு பிசியாக உள்ளனர்.
கடந்த மார்ச் 16 ஆம் தேதி ஆரம்பித்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
திமுக சார்பில் மருதுகணேஷும், தேமுதிக சார்பில் மதிவாணனும், பா.ஜ.க சார்பில் கங்கை அமரனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லோகநாதனும் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே இரட்டை இலையை யார் கைப்பற்றுவது என்ற நோக்கில் சசிகலா தரப்பும் ஒ.பி.எஸ் தரப்பும் நேற்று வரை மனுதாக்கல் செய்யாமல் இருந்தது.
இதுகுறித்த முடிவை தேர்தல் ஆணையம் நேற்று இரவு வெளியிட்டது. அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நல்ல படியாக நடைபெறுவதற்காக தற்காலிகமாக இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக அறிவித்தது.
இதையடுத்து டி.டி.வி தினகரனுக்கு தொப்பி சின்னமும் மதுசூதனனுக்கு இரட்டை மின்கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று வரை வெயிடிங்கில் இருந்த டி.டி.வி தினகரனும், ஒ.பி.எஸ் தரப்பு மதுசூதனனும் இன்று மனுதாக்கல் செய்தனர்.
இந்நிலையில், அவர்கள் தான் இரட்டை இலைக்காக காத்திருந்தார்கள் என்றால் 22 ஆம் தேதி வேட்புமனுதாக்கல் என அறிவித்த தீபா அடுத்த நாளைக்கு ஏன் மாற்றினார் என்றுதான் இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் இன்று ஒருவழியாக தீபா வேட்புமனுதாக்கல் செய்து விட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தீபா, அதிமுகவின் பிளவிற்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் என் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார்.
மேலும் அதிமுக பிளவு அதிமுகவினருக்கு ஒரு மிகப்பெரிய பாடம் எனவும், ஒரு நல்ல கட்சியின் தலைமையை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்கு இதுவே எடுத்துகாட்டு எனவும் தெரிவித்தார்.
