சசிகலாவின் காலில் ஊர்ந்து சென்று விழுந்து முதல்வர் பதவியை பெற்றுவிட்டு, அவருக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி என  அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையது கான் விமர்சித்துள்ளார்.

ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுகவில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறினார் அவற்றை இல்லாம் மனதில் இருந்து அப்புறப்படுத்தி கட்சி ஒன்றுபட வேண்டும். மீண்டும் ஆளும் நிலைக்கு அதிமுக வர வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் , எங்கள் தரப்புக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை. கழக ஒற்றுமையையே அனைவருக்கும் பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் ஓபிஎஸ் கோரிக்கையை இபிஎஸ் முற்றிலுமாக நிராகரித்தார்.

ஓபிஎஸ் பசுத்தோல் போர்த்திய புலி.! இபிஎஸ்யை அழைக்க அவருக்கு எந்த தகுதியும் கிடையாது..!ராஜன் செல்லப்பா ஆவேசம்

கட்சிக்கு துரோகம் செய்தவர் ராஜன் செல்லப்பா

இந்தநிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பன்னை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான், எடப்பாடி பழனிசசாமி பதவி ஆசை, பண ஆசை பிடித்தவர் சசிகலாவின் காலில் ஊர்ந்து சென்று பதவியை பெற்றுவிட்டு சசிகலாவிற்கு துரோகம் செய்ததாகவும் குற்றம்சாட்டினார். கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த போது, அதிமுக மூத்த நிர்வாகியும் மூத்த அமைச்சருமான செங்கோட்டையனை தான் முதன் முதலில் சசிகலா முதல்வராக தேர்வு செய்ததாக தெரிவித்தார். ஆனால்அதனை செங்கோட்டையன் ஏற்காததினால் இபிஎஸ் முதல்வராக தேர்வு செய்யப்பட்டதாக கூறினார். ஓ.பன்னீர்செல்வத்தை பசுத்தோல் போற்றிய புலி என ராஜன் செல்லப்பா கூறுகிறார். பல கட்சி மாறி , கட்சிக்கு துரோகம் செய்தவர் ராஜன் செல்லப்பா, ஓபிஎஸ் பற்றி பேச அவருக்கு தகுதி இல்லையென விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்

வீர வசனம் பேசிய ஸ்டாலின்..! மோடியுடன் சந்திப்பில் சேர் நுனியில் உட்கார்ந்தது ஏன்..? அண்ணாமலை கிண்டல்