AIADMK teams have a good environment on the Internet said as thambidurai
அதிமுக அணிகள் ஒன்றிணைவதற்கான நல்ல சூழல் உள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. இந்த இந்த பிளவு இரண்டு, மூன்று என்ற அளவில் தற்போது உள்ளது.
அதிமுக அணிகளை சேர்க்கும் அதிமுகவினர் பேசி வருகின்றனர். இது குறித்து பல்வேறு கருத்துகளும் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அம்மாவுடைய ஆட்சி காப்பாற்றப்பட வேண்டும்; எம்.ஜி.ஆரின் இயக்கம் காக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம் என்றார்.
அதிமுகவின் தொண்டனாக அதிமுக அணிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே என் கருத்து. அணிகள் இணைப்பு குறித்து அவரவர் போக்கிலே பேசி வருகின்றனர். நான் என்னுடைய வழியில் சொல்கிறேன்.
அதிமுக அணிகள் இணைய கட்சி தொண்டர்களும், தமிழக மக்களும் விரும்புகின்றனர். அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியை செய்து வருகிறேன்.
அனைவரும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைய வேண்டும். அதிமுக அணிகள் ஒன்றிணைவதற்கான நல்ல சூழல் உருவாகி உள்ளது
இவ்வாறு தம்பிதுரை கூறினார்.
