Asianet News TamilAsianet News Tamil

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் அதிரடி ரெய்டு!!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு உள்பட அவருக்கு சொந்தமாக உள்ள 28 இடங்களில், லட்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
AIADMK raids 28 places owned by former minister KC Veeramani
Author
Chennai, First Published Sep 16, 2021, 8:06 AM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு உள்பட அவருக்கு சொந்தமாக உள்ள 28 இடங்களில், லட்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக ஆட்சியில், வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு வந்த புகாரை தொடர்ந்து, இந்த அதிரடி ரெய்டு இன்று காலை 6 :30 மணியில் இருந்தே நடந்து வருகிறது.

AIADMK raids 28 places owned by former minister KC Veeramani

சென்னையில் மட்டும் நான்கு இடங்களிலும், மேலும் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் அவருக்கு சொந்தமாக உள்ள, திருமண மண்டபம், வீடு, நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட 28 இடங்களில் அதிரடி சோதனையில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.  ஏற்கனவே அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணி ஆகியோர் வீடுகளிலும் வருமானவரி சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

AIADMK raids 28 places owned by former minister KC Veeramani

தற்போது வரை இவரிடம் இருந்து கை பற்றபட்ட  ஆவணங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல், ஊழல் செய்த அமைச்சர்கள் சிறை செல்வார்கள் என கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையிலேயே இந்த அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios