Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி பேசிக்கொண்டிருந்த போதே திடீரென மயங்கி விழுந்த செம்மலை.. அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்.!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, திமுக அரசு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். அப்போது, அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை திடீரென மயங்கி விழுந்தார். 

aiadmk protest... Fainted aiadmk semmalai
Author
Salem, First Published Feb 28, 2022, 1:52 PM IST

திமுக அரசுக்கு எதிராக அதிமுக செய்த ஆர்ப்பாட்டத்தின் போது செம்மலை திடீரேன மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கடந்த 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

aiadmk protest... Fainted aiadmk semmalai

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நரேஷ் அளித்த புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்தது, தொழிற்சாலை அபகரிப்பு செய்தது என அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 

aiadmk protest... Fainted aiadmk semmalai

இந்நிலையில், ஜெயக்குமார் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அந்த வகையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, திமுக அரசு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். அப்போது, அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை திடீரென மயங்கி விழுந்தார். இதனால், ஆர்ப்பாட்டத்தின் போது பரபரப்பு ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பினர். 

Follow Us:
Download App:
  • android
  • ios