பிரசாரம் என்ற பெயரில் அமைச்சர்கள் கோமாளித்தனமாக செயல்படுகிறார்கள் - ஜெயகுமார் காட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தேர்தல் விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதிமீறல்களில் திமுகவினர் ஈடுபடுவதாகவும் அது குறித்த ஆவணங்களை, தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தினமும் திமுகவினர் தேர்தல் விதி மீறல்களில் ஈடுபடுகின்றனர்.
ஒரே தொகுதியில் 30 அமைச்சர்கள் முகாமிட்டு அவர்கள் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. வாக்கு சேகரிக்கிறேன் என்ற பெயரில் ஒட்டகம் மீது அமர்ந்து வாக்கு சேகரிப்பு, டீ மற்றும் பஜ்ஜி, வடை போட்டு கொடுத்து கோமாளித்தனமான செயல்களை செய்து கோமாளிதனத்தின் உச்சகட்டமாக அமைச்சர்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டினார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் நாட்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க பந்தல் அமைத்து அவர்களுக்கு பணம் மற்றும் வீடுகளுக்கு காய்கறிகள், இறைச்சி என தினமும் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். எனினும் மக்கள் இந்த ஆட்சியாளர்களுக்கு தேர்தலில் சவுக்கடி கொடுப்பார்கள்.
தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் சுமார் 35 கோடி வரை செலவு செய்கின்றனர். 40 ஆயிரம் வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். திருமங்கலம் ஃபார்முலா போன்று புது பார்முலாவை திமுக கடைபிடிக்கிறது. அந்த தொகுதிக்கு பண விநியோகம் சீராக செல்வதற்காக அதற்கு அருகே உள்ள மாவட்டங்களில் முதலமைச்சர் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
முதல்வரை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி சேலத்தில் திடீர் ஆய்வு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ள நிலையில் வேங்கை வயல் பகுதிக்கு முதலமைச்சர் செல்லாதது ஏன்? திமுகவினர் அனைவரும் காரில் கட்சிக் கொடி கட்டி வலம் வருகிறார்கள். பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள், இது சட்டப்படி விதி மீறல். தேர்தல் ஆணையம் இதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; 7 தமிழக மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு
காங்கிரஸ் கட்சி சார்பில் இயேசு கிறிஸ்துவின் படத்தை போட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட கடவுளை தேர்தல் பிரசார துண்டுகளில் விளம்பரமாக பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறி திமுக கூட்டணியினர் செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு ஓபிஎஸ்யை கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.