அதிமுக எல்லைக்குள் நுழைந்த ஓபிஎஸ்.. தென் சென்னையில் புது ஸ்கெட்ச் போட்ட பன்னீர்செல்வம்!!
அதிமுகவின் தலைமை யார் என்று எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தற்போது வரை போட்டி ஏற்பட்டு வருகிறது.
அதிமுக தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழக நிர்வாகிகளை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று நியமித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “வேளச்சேரி மத்திய பகுதி கழக அவைத்தலைவராக தரமணிஎஸ். ரமேஷ், இணைச் செயலாளராக கே. கண்ணம்மா, துணைச் செயலாளராக டி. முத்துக்குமரன் என்கிற டேவிட், பொருளாளராக வேளச்சேரி ஏ. ஜோன்ஸ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க..2 கோடி முக்கியம் பிகிலு.. 2024 தேர்தலுக்கு மு.க ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்! அதிமுக - பாஜகவுக்கு புது ஆப்பு
வேளச்சேரி மத்திய பகுதி 177 மற்றும் 178-வது கழக நிர்வாகிகள், மயிலாப்பூர் கிழக்கு பகுதி 125-வது கழக நிர்வாகிகள், மயிலாப்பூர் 171-வது மேற்கு வட்ட கழக நிர்வாகிகள், மயிலாப்பூர் கிழக்குப் பகுதி 126-வது கிழக்கு வட்ட நிர்வாகிகள் மற்றும் மேலமைப்பு பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்ட மீனவரணி செயலாளராக வி. வெங்கடேசன், இணைச் செயலாளராக ஆர். சிவக்குமார், மயிலாப்பூர் கிழக்கு பகுதி மகளிர் அணி செயலாளராக கு. பாஞ்சாலி, மாணவர் அணி செயலாளராக கோ. குகன், சிறுபான்மை அணி செயலாளராக கு. சுந்தர், புரட்சித் தலைவிஅம்மா பேரவை செயலாளராக எம். விஜி என்கிற விஜயகுமார் என மொத்தம் 185 பேர் கட்சியின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கட்சித் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க..இனிமே இலவசம் கிடையாது.. ஐபிஎல் சீசனை காசு கொடுத்தா தான் பார்க்க முடியும் - முழு விபரம்