பொன்னியின் செல்வன் படத்தை விட நிதியமைச்சரின் ஆடியோ தான் இப்போ டிரெண்ட் - செல்லூர் ராஜூ நக்கல்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை விட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ தான் இப்போ ஹைலைட் என மதுரையில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

aiadmk mla sellur raju slams minister ptr thiagarajan in madurai meeting

மதுரை பெத்தானியபுரம் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில்  நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ரஜினிகாந்த் படம் போல் மீசை வச்ச ரஜினி, மீசை இல்லாத ரஜினி என்பது போல் திமுக செயல்படுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது மாறிவிடுவார்கள்.

முதல்வருக்கு உழைப்பவர்களின் கஷ்டம் தெரியுமா? நோகாம முதலமைச்சர் பதவி வாங்கி விட்டார். அவருக்கு தொழிலாளியினுடைய வழி எப்படி தெரியும்? சட்ட மசோதா ஏற்றிவிட்டு போராட்டம் அறிவித்த பிறகு, எதிர்ப்பு தெரிவித்த பிறகு இன்று காலை வாபஸ் வாங்கியுள்ளார். நிறுத்தி வைக்கிறேன் என்று சொல்லிய முதல்வர் இன்று வாபஸ் பெற்று விட்டாதாக கூறி சிவப்பு சட்டை அணிந்து மே தினம் கூட்டத்திற்கு வருகிறார். 

அரசுப் பேருந்தில் இருந்து மீனவப் பெண்கள் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு

தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யாமல் கம்யூனிஸ்டுகள், திமுகவுடன் ஒட்டிக்கொள்கிறார்கள். எதற்கு? எல்லாம் பணத்திற்காக தான். தேர்தலுக்கு 25 கோடி ரூபாய்  பெற்றவர்கள் அடுத்த முறை 50 கோடி ரூபாய் எதிர் பார்த்து தான். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை விட நிதியமைச்சரின் ஆடியோ தான் ஹைலைட். மதுரைக்காரன் வீரமாணவன். அமைச்சர் தியாகராஜனை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

நாகையில் மதுபோதையில் தறிகெட்டு ஓடிய விவசாய சங்க தலைவரின் கார் மோதி ஒருவர் பலி

ஸ்டாலின் அப்பா, உதயநிதி தாத்தா, இன்பநதியின் கொள்ளு தாத்தாவிற்கு மதுரையில் நூலகம் கட்டப்பட்டுள்ளது. வேறெதுவும் மதுரைக்கு செய்யவில்லை. எந்த திட்டங்களும் கொண்டுவரவில்லை. திமுக வெட்டக்கூடிய ரிப்பன் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களில் செயல்படுத்தப்பட்டது தான். கோவைக்கு சிறப்பு நிதி ஒதுக்கியவர்கள், நிதி அமைச்சர் உள்ள  நம்ம மதுரை தொகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை. நீங்கள் Without டிக்கெட் தான். அன்று டிடிஆர் டிரைனில் இருந்து இறக்கி விட்டிருந்தால் இந்த நிலமை வந்திருக்காது. திமுகவை வீட்டிற்கு அனுப்பும் பணியை தேர்தல் எப்போது வந்தாலும் நிச்சயமாக தொழிலாளர்கள் செய்வார்கள் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios