Asianet News TamilAsianet News Tamil

புகழேந்தி சொன்ன மாதிரி சிந்து அபிவிருத்தி கழகம் என ஆரம்பிச்சுக்குங்க! ஜெயக்குமாரை அலறவிடும் OPS ஆதரவு எம்எல்ஏ

தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வால் இரண்டு முறை முதல்வராக அறிவிக்கப்பட்டவர் ஒபிஎஸ் அவர் இல்லாத போதும் ஒருமனதாக மூன்றாவது முறை முதல்வரானார். ஆனால், ஜெயக்குமார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வால் தூக்கி எரியப்பட்டவர். 

aiadmk mla ayyappan slams jayakumar
Author
First Published Dec 24, 2022, 12:59 PM IST

ஜெயலலிதா வால் தூக்கி எரியப்பட்ட ஜெயக்குமார் இன்று ஒபிஎஸ்-யை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது என  உசிலம்பட்டியில் ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் கூறியுள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்;- மக்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்திருந்தேன். அதை பரிசீலனை செய்த அதிகாரிகள் விரைவில் நிறைவேற்றுவதாக உத்திரவாதம் அளித்துள்ளனர். அவ்வாறு நிறைவேற்றினால் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் வரவேற்கும் திட்டமாக அமையும். நாங்களும் இத்திட்டத்தை வரவேற்கிறோம் என பேசினார்.

aiadmk mla ayyappan slams jayakumar

தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வால் இரண்டு முறை முதல்வராக அறிவிக்கப்பட்டவர் ஒபிஎஸ் அவர் இல்லாத போதும் ஒருமனதாக மூன்றாவது முறை முதல்வரானார். ஆனால், ஜெயக்குமார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வால் தூக்கி எரியப்பட்டவர். அந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே இன்று அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பதையே மறந்து கைக்கூலிகளை சேர்த்துக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் என கூறி வருகிறார்.

aiadmk mla ayyappan slams jayakumar

ஜெயலலிதா வால் தூக்கி எரியப்பட்ட ஜெயக்குமார் இன்று ஒபிஎஸ்-யை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது. ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கார்ப்பரேட் கூட்டம் என பேசியுள்ளார். அங்கு வந்தவர்கள் அனைவரும் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் தான் தற்போது மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டு கூட்டம் நடைபெற்றது. இதை பேச எந்த தகுதியும் இல்லை. அவர் வேண்டுமானால் புகழேந்தி கூறியது போல சிந்து அபிவிருத்தி கழகம் என ஆரம்பித்து அவர் ஒரு இயக்கத்தை நடத்திக் கொள்ளட்டும். மீண்டும் ஒருமுறை அண்ணன் ஒபிஎஸ் குறித்து பேசினால் உசிலம்பட்டி மக்கள் தக்க பதில் நடவடிக்கை எடுப்போம் என ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios