டெல்லியில் பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்து அமைச்சர்கள் இருவர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி தரப்புக்கும் பாஜக மேலிடத் இருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு தற்போது வரை தீர்ந்தபாடில்லை. பாஜக மேலிடத்திற்கு ஏற்பட்டுள்ள மனக்கசப்பை தீர்க்க அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எஸ் பி வேலுமணி நேற்று முன்தினம் டெல்லி சென்றனர். நீண்ட முயற்சிக்குப் பிறகு பியூஷ் கோயலை சந்தித்த அவர்கள் இருவரும் அவர் மூலமாக அமித்ஷாவை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்தனர்.

ஒருவழியாக அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்த நிலையில் அமைச்சர்கள் இருவரும் நேற்று பிற்பகலில் அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது சமாதானப் படலம் முடிந்து எடப்பாடி உடனான உறவு சுமூகமாக என்று அதிமுக தரப்பில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அமைச்சர்கள் இருவரது அரசியல் தொடர்பான பேச்சுகள் எதையும் அமைச்சா் காது கொடுத்து கேட்கவில்லை என்கிறார்கள். 

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைய காரணம் தேர்தல் பணிகளில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் தொய்வு தான் என்று அமித்ஷா அமைச்சர்கள் இருவரிடமும் கண்டிப்புடன் கூறி உள்ளார். ஜெயலலிதா இருக்கும் போது தேர்தல் பணி யாற்றிய அமைச்சர்கள் பலரும் தற்போது அந்த பணியை செய்யவில்லை என்று தனக்குத் தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார். தேர்தல் பணிகளில் டபுள் கேம் ஆடிய அமைச்சர்கள் யார் யார் என்பதை பாஜக அறிந்து வைத்திருப்பதாக கூறி அமைச்சர்கள் இருவரையும் அதிர வைத்துள்ளார் அமித்ஷா. 

இதுதவிர முதலமைச்சர் குறித்தும் சில கருத்துக்களைக் கூறி அமித் ஷா தனது கோபத்தை பதிவு செய்ததாகவும் அதற்கு அமைச்சர்கள் இருவர் கூறிய சமாதான வார்த்தைகளை அமித்ஷா காதில் போட்டுக் கொள்ளவில்லை என்றும் சொல்கிறார்கள். எனவே இந்த 20 நிமிடப் பேச்சு வார்த்தைகள் அதிமுக தரப்பு எடப்பாடி தரப்போகும் மகிழ்ச்சி அடையும் வகையில் எதுவும் நடைபெறவில்லை என்கிறது டெல்லி வட்டாரம்.