'பாமக இல்லையென்றால் அதிமுக கிடையாது...' ராமதாஸிடம் சரண்டரான பரம எதிரி அதிமுக அமைச்சர்..!
தமிழகத்தில் பாமக இல்லையென்றால் அதிமுக கிடையாது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளது அதிமுக உயர்மட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாமக இல்லையென்றால் அதிமுக கிடையாது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளது அதிமுக உயர்மட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் விழுப்புரம் பழைய பேருந்து நிலைய பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க கட்சிகள் போட்டிபோடுகின்றன. எங்களால்தான் மற்ற கட்சிகளுக்கு மறுவாழ்வு என்றார். இந்நிலையில் விழுப்புரத்தில் நடந்த பாமக வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது: கடந்த 1996ல் ஜெயலலிதாவுக்கே சோதனை வந்தது. அப்போதைய தேர்தலில் தோல்வியை கண்டார் ஜெயலலிதா.
அப்போது சிலர் அதிமுகவின் எதிர்காலம் முடிந்துவிட்டது என்று பேசினர். தோல்வியில் துவண்டு கிடந்த அதிமுக 1998ம் ஆண்டு தேர்தலின்போது பாமகவோடு கூட்டணி வைத்தது. மாபெரும் வெற்றியை பெற்றோம். பாமக இல்லையென்றால் தமிழகத்தில் அதிமுக கிடையாது. அதிமுகவை பொறுத்தவரையில் நம்பிவந்தவர்களை வாழவைத்துதான் பழக்கம். அதேபோல் 2011ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் விஜயகாந்தோடு கூட்டணி வைத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றோம்.
கடந்த கால தேர்தலின் போதெல்லாம் எம்எல்ஏ, எம்பி தேர்தலோடு கூட்டணி முறிவு ஏற்படும். இதனால் அடிமட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளாட்சிப்பதவிக்கு வரமுடியாமல் போனது. ஆனால் இந்த தேர்தலில் கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தலில் பலம் வாய்ந்த இதே கூட்டணிதான் நீடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.