தென்னரசுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்படுமா? அவைத்தலைவர் என்ன சொன்னாரு தெரியுமா?

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் வாங்கி வேட்பாளரை தேர்ந்தெடுக்குமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் படிவங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று சமர்பித்தார். 

AIADMK leadership will decide on the OPS campaign.. tamil magan hussain

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம்  செய்ய ஓ.பன்னீர்செல்வம் அழைப்பது குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் வாங்கி வேட்பாளரை தேர்ந்தெடுக்குமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் படிவங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று சமர்பித்தார். 

AIADMK leadership will decide on the OPS campaign.. tamil magan hussain

அவைத்தலைவர் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்த தேர்தல் ஆணையம், அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு  தலைமை தேர்தல் ஆணையம் கடிதமும் அனுப்பியது. இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது.

இதனையடுத்து, டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்;- உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்று பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வேட்பாளரை தேர்வு செய்யப்பட்டது. அதை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அப்படிடையில் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நீதியினை ஏற்று  தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்து விட்டு வந்திருக்கிறோம்.

AIADMK leadership will decide on the OPS campaign.. tamil magan hussain

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும் என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் இபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கீடு செய்தது மகிழ்ச்சி அளிக்கின்றது. இதுவே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி.  எனவே நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம்.

AIADMK leadership will decide on the OPS campaign.. tamil magan hussain

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி சுற்றறிக்கையின் மூலம் வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்ற நீதியின் அடிப்படையிலேயே முறைப்படி நடத்தி இருக்கிறோம். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓபிஎஸ்ஐ  பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என்று தமிழ் மகன் உசேன் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios