எங்க கட்சியை நாங்க பாத்துக்குறோம்!.. பாஜக அறிவுரை தேவையில்லை.. அதிமுக - பாஜக கூட்டணிக்குள் உள்குத்து
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவை கழட்டிவிட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி எடுத்த ஆக்சன் இன்று தமிழக பாஜகவினரை சந்திக்க வைத்துள்ளது.
ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக இதுவரை அதன் நிலைபாட்டை தெரிவிக்காத நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4 ஆம் தேதி மாரடைப்பால் காலமானதையடுத்து அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இந்த தொகுதியில் போட்டியிடும் அனைவரும் அவர்களின் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் பாஜக மட்டும் அதன் நிலைபாட்டை இன்னுமும் தெரிவிக்காமலேயே இருக்கிறது. காலையில் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் சிடி ரவி ஆகியோர் சந்தித்தனர்.
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்ஸை இணைக்க பாஜக முயற்சிப்பதாக அப்போது செய்திகள் வந்தன. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார் பாஜக அகில இந்திய பொதுச்செயலாளர் சிடி ரவி. அப்போது, 1972 இல் அதிமுக உருவாகும் போது அதனை உருவாக்கிய கட்சி தலைவரான எம்ஜிஆர் திமுகவை ஒரு தீய சக்தி என குறிப்பிட்டார். அது தற்போது வரை அதே நிலையில் தான் உள்ளது ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரவுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கட்சிக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு குறைந்து வருகிறது. இதற்கு காரணம் ஊழல் பணம் திமுகவினர் ஒரு குடும்ப வளர்ச்சிக்காகவே உழைப்பது. மின்கட்டண உயர்வு, சொத்து பிரிவு உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, பால் விலை உயர்வு, திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாகவும் திமுக எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் நிர்வாகிகள் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறது.
இதையும் படிங்க..LEO: விஜய்யை துரத்தும் சர்ச்சை!.. தளபதி 67 டைட்டில் லியோ கிளப்பிய சர்ச்சை.. வச்சு செய்யும் நெட்டிசன்கள் !!
இதன் காரணமாக மீது மக்கள் திமுகவிற்கு எதிராகவே உள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு தரப்பையும் இணைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.திமுகவை வீழ்த்த ஒன்றிணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே முடியும் அதற்கு ஒன்றிணைந்த அதிமுக அவசியம். திமுகவை எதிர்த்து போட்டியிட ஒரு உறுதியான வேட்பாளர் வேண்டும் அதற்கு அதிமுகவின் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோர் ஒன்றிணைய வேண்டும் இதனை நாங்கள் நேரில் வலியுறுத்தினோம் என்று கூறினார்.
அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் கோவை மண்டலச் செயலாளராக பணியாற்றி வருகிறார் சிங்கை ஜி ராமச்சந்திரன். இவர் தற்போது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், இங்கு யார் நரகத்தை சேர்ந்தவர்கள் என்று பாஜக அகில இந்திய பொதுச்செயலாளர் சிடி ரவி கூறியதை கண்டித்துள்ளார்.
எங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவா ? நீங்கள் ஒரு தேசியக் கட்சியில் இருந்து வருவதால் நீங்கள் எதையும் கட்டளையிட முடியும் என்று அர்த்தமா ? கர்நாடகா பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று சொன்னால் சரியா ? திமுகவை மட்டும் எதிர்த்து எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறாத நீங்கள், 30 வருடங்கள் ஆட்சி செய்த எங்களுக்கு எப்படி அறிவுரை கூறலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
தீயசக்தி என்றால் என்ன, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972-ல் கட்சியை ஆரம்பித்ததற்கான காரணத்தை சொல்கிறீர்களா ? தயவுசெய்து உங்கள் வரம்புகளை அறிந்து கொள்ளுங்கள் என்று மிகவும் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார் அதிமுகவை சேர்ந்த சிங்கை ஜி ராமச்சந்திரன்.
இதையும் படிங்க..AIADMK: அதிமுக பொதுக்குழு விவகாரம்; ஈபிஎஸ் Vs ஓபிஎஸ் - யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்.? டாப் 5 ட்விஸ்ட்ஸ் !!