நம் கூட்டணியில் பெரிய கட்சி என்பது அதிமுக தான்.. அண்ணாமலை சொல்ல வருவது என்ன? பரபரப்பு பேட்டி
திமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நிற்பது பலம் வாய்ந்த கட்சியாகவும், மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்ற வேட்பாளராகவும் இருப்பது அவசியம். கூட்டணி தர்மம் காக்கப்பட வேண்டும். நம் கூட்டணியில் பெரிய கட்சி என்பது அதிமுக தான்.
திமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நிற்பது பலம் வாய்ந்த கட்சியாகவும், மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்ற வேட்பாளராகவும் இருப்பது அவசியம் என அண்ணாமலை கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை;- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். நிற்க கூடிய வேட்பாளர் பண பலம் , படை பலம் ஆகியவற்றை எதிர்க்கும் வகையில் ஒரே ஒரு வேட்பாளர் நிற்க வேண்டும். அந்த வேட்பாளரின் பின்னால் அனைவரும் நிற்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு, பாஜகவின் நிலைப்பாடு.
நிற்ககூடிய ஒரு வேட்பாளரை வெற்றிபெற எல்லா வகையான அஸ்திரங்களையும் கொடுக்க வேண்டியது கூட்டணியின் கடமை. திமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நிற்பது பலம் வாய்ந்த கட்சியாகவும், மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்ற வேட்பாளராகவும் இருப்பது அவசியம். கூட்டணி தர்மம் காக்கப்பட வேண்டும். நம் கூட்டணியில் பெரிய கட்சி என்பது அதிமுக தான்.
அதிமுக பாஜக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றியே முதன்மையான நோக்கம். இடைத்தேர்தல் வேட்பாளர் விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது. அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. இன்னும் நேரம் இருப்பதால் பொறுமை அவசியம். வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான எல்லா சூழலையும் நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியில் தான் குழப்பம் உள்ளது. எதிரணியில் குழப்பம் உள்ளது என பேச இளங்கோவனுக்கு தகுதியில்லை. இடைத்தேர்தலில் பணபலத்தைக் காட்ட திமுக தயாராகிவிட்டது.
திருச்செந்தூர் கோவில் 5309 மாடுகள் காணோம் 1302 கோடி கணக்கு வழக்கில் குறைகள் உள்ளது. 15 லட்சம் லட்சம் பில்கள் இதுவரை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறது. இது இல்லை என்று அவர் இதுவரை கூறவில்லை. நான் கேட்கும் கேள்விக்கு ஆதாரப்பூர்வமாக பதில் இல்லை. ஒரு திருக்கோயிலின் உண்டியலில் பொதுமக்கள் செலுத்தும் காணிக்கை அந்த கோயிலின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் இது தவிர கோயில் நிர்வாகத்தில் பணி பெறக்கூடிய அதிகாரிகள் பஜ்ஜி, போண்டா, மிச்சர் போன்ற உணவு வகைகள் பயன்படுத்தக் கூடாது. அறநிலையத்துறை குறித்து நான் பேசிய அனைத்தும் உண்மை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.