கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன்தான் அ.தி.மு.க ஆட்சி என்றும், அதற்கு பாம்பாறு உயர்மட்ட பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலே உதாரணம் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது என மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

மேலும், கமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன் அ.தி.மு.க ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம் என்றும், விரைவில் எடப்பாடியின் ஊழல் பாலமும் உடைந்து விழும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் கடந்த 2016 ஆம் ஆண்டு பாம்பாற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை 2018 ஆம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். 

பாம்பாறு பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாலத்தில் விரிசல் ஏற்படிருக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தரமான பொருட்களைக் கொண்டு பாலம் கட்டப்படாததே காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர். அது மட்டுமல்லாமல் முறையான கட்டுமானம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தங்களது குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கமிஷன் - கலெக்சன் - கரெப்ஷன் என்பது அதிமுக ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

ஸ்டாலின் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது! கமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன் அ.தி.மு.க ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம்! விரைவில் எடப்பாடியின் ஊழல் பாலமும் உடைந்து விழும்! என பதிவிட்டுள்ளார்.