அதிமுக என்ன சாதி கட்சியா? கட்சி ஆபிசுக்கு கண்டிப்பா வருவேன் - பயமுறுத்தும் சசிகலா
தொடர் வெற்றிகளை கண்ட கழகம் இன்று தொடர் தோல்விகள். இதுபோன்ற நிகழ்வு களைய வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் பகுதிகளில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா. தொண்டர்களை சந்தித்த சசிகலாவுக்கு மேல தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா திரு உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் செய்திகளுக்கு.. ஓபிஎஸ்சை தே* என்று அவர் திட்டினார்.. எடப்பாடி பழனிசாமி ரசித்தார் - மருது அழகுராஜ் கொடுத்த அதிர்ச்சி
மேலும் திருச்சிற்றம்பலம் மூன்று முனை சந்திப்பில் பிரசார வாகனத்தில் தொண்டர்களிடம் பேசிய அவர், ‘பல அடக்குமுறைகளை அம்மாவும் நானும் சேர்ந்து கழகத்தை கட்டி காத்துள்ளோம் அம்மாவிடம் இருந்த என் நட்பு புனிதமானது. அம்மா என் மீது வைத்திருந்த அன்பு இந்த உலகத்தில் உள்யாரும் வைத்திருக்க முடியாது. என்னை அம்மாவிடம் என்னை பிரிக்க நிறையபேர் சூழ்ச்சிகளை செய்தார்கள். அதையெல்லாம் முறியடித்து சாதனை படைத்தது.
தொடர் வெற்றிகளை கண்ட கழகம் இன்று தொடர் தோல்விகள். இதுபோன்ற நிகழ்வு களைய வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். எந்த திமுக கட்சிக்கு எதிராக நம் தலைவர் கட்சி ஆரம்பித்தார்களோ , அந்த திமுக ஆட்சியை கூட எதிர்க்க ஆளில்லை. கழக தொண்டர்களுக்கு வெருப்பினை ஏற்படுத்தி வருகிறார்கள். கழக நிர்வாகிகள் கட்சியை மேலும் அழிவின் பாதைக்கு கொண்டு செல்கிறார்கள். உங்களின் பேர் ஆதரவை பார்க்கு போது எனக்கு தைரியம் இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவை அழிக்க பார்க்கும் 3 நபர்கள்.. ஓபிஎஸ் போட்ட டீல்.! அதிமுக பிரமுகர் வெளியிட்டசீக்ரெட்
தமிழகத்தில் புரட்சி தலைவர் மற்றும் அம்மாவின் அவர்களின் ஆட்சி மட்டுமே சிறந்த ஆட்சியாக இருந்தது. தமிழக வரலாற்றிலேயே புரட்சி தலைவி ஆட்சிகாலத்தில் மட்டுமே மகளிருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். ஜெயலலிதா அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்து 13 மாதங்கள் ஆகிவிட்டது. அவர்களின் அட்டுழுழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் அறிவிக்கப்படாத மின் வெட்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆட்சியாளர்களை பற்றி தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள்.
அடுத்து விரைவில் அமைய போவது நமது கழக ஆட்சி என தொண்டர்கள் மத்தியில் சூளுரை. மேலும் வானூர் பகுதியில் கலை கல்லூரி பணிகள் துவங்கவில்லை எனவும் 13 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள திருச்சிற்றம்பலம் ஊராட்சி இன்னும் தரம் உயர்த்தவில்லை. இரும்பை கிராமத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சோலார் திட்டம் செயல்படுத்த வில்லை என இப்படி பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு.. சசிகலா வழியில், பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்வார் எடப்பாடி.. கேசிபி சொன்ன அதிர்ச்சி தகவல்!