கள்ளக்குறிச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கையால் வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது என  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

திண்டுக்கல், மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நேரடியாக சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து செய்தியளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்;- விவசாயிகள் எப்போது பாதிக்கப்பட்டாலும் அதிமுக அரசு நேசக் கரம் நீட்டி உதவும். விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பொருட்களை பாதுகாத்து விற்பனை செய்ய நடவடிக்கை. விவசாயிகளுக்கு பல்வேறு வகையான மானியங்கள் வழங்கப்படுகின்றன. கால்நடை பூங்கா விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும், பேசிய முதல்வர் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கள்ளக்குறிச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கையால் வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.