அரசு விழாக்கள், ஆய்வு கூட்டங்களில், எதிர்க்கட்சி எம்.பி.எம்.எல்.ஏ.,க்களை பங்கேற்கவிடாமல், வேண்டுமென்றே தொடர்ந்து, அ.தி.மு.க., அரசு புறக்கணிப்பது கண்டனத்துக்குரியது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... "தர்மபுரியில் நடந்த, கொரோனா குறித்த ஆய்வு கூட்டத்தில், தி.மு.க., - எம்.பி., செந்தில்குமாரை அனுமதிக்கவில்லை. 'நான் நடத்தும் ஆய்வு கூட்டங்களில், எம்.பி.,யை எப்படி அனுமதிக்க முடியும்' என, முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பியிருப்பது ஜனநாயக விரோதம்; பண்பாடற்ற செயல்; அநாகரிகத்தின் உச்சம்.வேலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், கட்சி நடத்தும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்க அனுமதி கேட்கவில்லை. கொரோனா நோய், மரணங்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தான் அனுமதி வேண்டும் என, தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கேட்கின்றனர்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவமதிக்கும் போக்கை, முதல்வரும், அ.தி.மு.க., அமைச்சர்களும் கைவிட வேண்டும். கைவிடாவிட்டால் கடுமையாக மக்கள் தண்டிப்பர்".