Asianet News TamilAsianet News Tamil

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் - நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பியதாக வழக்கு தொடர்பாக கேரள பெண் ரூ.1 கோடி நஷ்டஈடு செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

Aiadmk Ex-Minister Vijayabaskar should be given Rs. 1 crore: Court verdict-rag
Author
First Published Nov 10, 2023, 10:11 PM IST | Last Updated Nov 10, 2023, 10:11 PM IST

திருநெல்வேலி காவல் ஆணையரிடம் கேரளாவைச் சேர்ந்த சர்மிளா புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், “முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தன்னிடம் வாங்கிய ரூ. 14 கோடியில் ரூ. 3 கோடி மட்டும் திருப்பி அளித்து விட்டு, மீதமுள்ள பணத்தை தராமல் மிரட்டுவதாக குற்றம்சாட்டி இருந்தார். 

சர்மிளா அளித்த புகார் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகளாக வெளியாகின. இதனைத் தொடர்ந்து சி.விஜயபாஸ்கர்,  தன் மீது அவதூறு கருத்துக்களை பரப்பியதற்காக மான நஷ்ட ஈடு கோரி சர்மிளாவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Aiadmk Ex-Minister Vijayabaskar should be given Rs. 1 crore: Court verdict-rag

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், “அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர். அவர் மீது இது போன்ற தவறான அவதூறுகளை கூறக்கூடாது.

சமூக வலைதளங்களில் விஜயபாஸ்கர் குறித்த சர்மிளாவின் பதிவுகளை நீக்க வேண்டும்.  இது தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளையும் நீக்க வேண்டும். மேலும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு கேரளாவை சேர்ந்த சர்மிளா ரூ.1 கோடி நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios