#BREAKING நீதிமன்றத்தில் சரணடைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா.. என்ன காரணம் தெரியுமா?
ராசிபுரத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினரான குணசீலன் என்பவர் சத்துணவு வேலை வாங்கி தருவதாக கூறி 15 பேரில் ரூ.76,50,000 பெற்று சரோஜா மற்றும் கணவர் லோகரஞ்சனிடமும் இரண்டு தவணைகளாக மொத்தப் பணத்தையும் கொடுத்துள்ளார். ஆனால், வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். பொறுமை இழந்த குணசீலன் முன்னாள் அமைச்சர் சரோஜா மீது கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.76 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
பணமோசடி
ராசிபுரத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினரான குணசீலன் என்பவர் சத்துணவு வேலை வாங்கி தருவதாக கூறி 15 பேரில் ரூ.76,50,000 பெற்று சரோஜா மற்றும் கணவர் லோகரஞ்சனிடமும் இரண்டு தவணைகளாக மொத்தப் பணத்தையும் கொடுத்துள்ளார். ஆனால், வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். பொறுமை இழந்த குணசீலன் முன்னாள் அமைச்சர் சரோஜா மீது கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
முன்னாள் அமைச்சர் சரோஜா
இதனையடுத்து, குணசீலன் அளித்த புகாரின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் சரோஜா தரப்பில் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். சென்னை உயர்நீதிமன்றத்திலும் முன்ஜாமின் கோரிய மனுவை நிலுவையில் இருந்து வந்த போது வழக்கு தொடுத்த குணசீலன் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
தலைமறைவு
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பண மோசடி தொடர்பான வழக்கு சம்மந்தமாக ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி 25 லட்சம் ரூபாய் பிணை தொகையை கட்டி ஜாமீன் பெறலாம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த 8 மாதங்களாக தன்னை கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் சரோஜா தலைமறைவாக இருந்தார்.
நீதிமன்றத்தில் சரண்
இந்நிலையில், தற்போது ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சனம் ஆகிய இருவரும் சரணடைந்துள்ளார். இருவருக்கும் மொத்தம் 25 லட்சம் ரூபாய் பிணை தொகையை கட்டி ஜாமீன் பெறலாம் என்று நீதிமன்றம் கூறியதை அடுத்து சரணடைந்துள்ளனர்.