அதிமுக முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான மோகனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான மோகனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அரசியல் பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று பரவியது. அதன்படி கள்ளக்குறிச்சி அருகே வடக்கனந்தல் பகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மோகனுக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் அதிமுகவில் அமைப்பு செயலாளராகவும், தேர்தல் வழிகாட்டு குழு உறுப்பினராகவும் உள்ளார்.

இவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. உடனே மோகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், ஓட்டுநர்கள், வீட்டு பணியாளர்கள் என 14 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அந்த பரிசோதனை முடிவில் முன்னாள் அமைச்சர் மோகன், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 2 டிரைவர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.