அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

செல்போனுக்கு அனுமதி மறுப்பு

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வி கிடைத்துள்ளது இதன் காரணமாக அதிமுக தலைமை மீது தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதிமுகவில் தற்போது இரட்டைத்தலைமைக்கு பதிலாக ஒற்றை தலைமை வேண்டும் என முழக்கங்களும் எழுந்துள்ளது. எனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இவர்களில் யாரையாவது ஒருவரை பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கலாமா? என்ற விவாதமும் அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. சசிகலாவோ விரைவில் தாம் அதிமுகவில் தலைமை பொறுப்பை ஏற்பேன் என கூறிவருகிறார். இதற்க்கு வாய்ப்பு இல்லையென அதிமுக மூத்த நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர். இந்தநிலையில் தேனி,சேலம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ளதாக கூறி எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தியும் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகின்ற 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதிரவாளர்கள் கோஷம்

அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் செல்போன் கொண்டு செல்ல மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக பதாகையும் வெளியில் வைக்கப்பட்டது. இதனால் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக முன்னாள் எம்பியான மைத்ரேயன் பங்கேற்காமல் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது. கடந்த முறை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் உள்ள கூட்டத்தில் பா.ஜ.க. குறித்து பொன்னையன் பேசியது சர்ச்சையானதால் இந்த முறை யாரும் செல்போன் எடுத்து வரக்கூடாது என தலைமை உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் ஓற்றை தலைமை வேண்டும் என கோரி இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மற்றொரு போட்டி கும்பல் ஒற்றை தலைமை வேண்டுமெனில் ஓ.பி.எஸ் தான் முதலமைச்சர், அவர் தான், கட்சியின் தலைமை என இரு தரப்பு தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்

அவசரமாகக் கூடுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம்..! பொதுச் செயலாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனையா?