விளாத்திகுளம் இடைத்தேர்தலில் சீட் கிடைக்காததால் சுயேட்சையாக களமிறங்கி உள்ள மார்கண்டேயன் மாஸ் காட்டி வருவதால், அதிமுக, அமமுக தொண்டர்கள் களக்கமடைந்துள்ளனர்.

 

விளாத்திகுளம் இடைத்தேர்தலில் அதிமுக சீட் கொடுக்காததால் முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் சுயேட்சையாக களமிறங்கி இருக்கிறார். இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். காலை முதல் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆதரவாளர்கள் விளாத்திகுளம் நோக்கி அணிவகுக்கத் தொடங்கி விட்டனர். வேனில் ட்ரம்செட், கரகாட்டம், தப்பாட்டம் முழங்க விளாத்திகுளம் நகரில் வீதியுலா வந்து தெறிக்க விட்டனர். அப்போது அதிமுக வேட்பாளர் சின்னப்பன் மனு தாக்கல் செய்யும் வேளையில் உடனிருப்பதற்காக கோவில்பட்டியில் இருந்து கடம்பூர் ராஜூ காரில் வந்தார்.

கூட்டம் கூட்டமாக வேனில் வந்தவர்களை பார்த்து அதிமுகவினர் என நினைத்து உற்சாகமாக கையசைதார். ஆனால், வேனில் இருந்தவர்கள் மார்க்கண்டேயன் வாழ்க என கோஷமிட கடுப்பாகிக் கிளம்பிக் கிளம்பினார் கடம்பூரார். விளாத்திகுளம் வந்தடைந்த அவர் "வேன்களில் வண்டிகளில் வருகிற யாரையும் இங்கே அனுமதிக்கக் கூடாது’ என காவல்துறைக்கு உத்தரவு போட்டிருக்கிறார். அதன்படி போலீஸார் வண்டிகளை தடுத்து நிறுத்த, தடுப்புகளையும் மீறி மார்க்கண்டேயனின் ஆதரவாளர்கள் தேர்தல் அலுவலர் அறைக்கு வந்து சேர்ந்தனர்.

 

11-00 மணிக்கு சின்னப்பனும் மனுத்தாக்கல்செய்தார். அங்கிருந்து கடம்பூர் ராஜூவும் கிளம்பி விட்டார். பெரும் கூட்டத்தை கூட்டி மாஸ் காட்டிவிட்டார் மார்க்கண்டேயன். அதிமுக சார்பில் களம் இறங்கி இருக்கும் சின்னப்பனும் மனுத்தாக்கல் செய்ததால், அவரும் படை பலத்தை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், ஐநூறு பேரைக் கூட அவரால் திரட்ட முடியவில்லை. ஆனால், ஆளும் கட்சி வேட்பாளரையும் தாண்டி, சுயேட்சையாக கலமிறங்கும் மார்கண்டேயன் பெரும் கூட்டத்தை திரட்டி மாஸ் காட்டி விட்டார். இந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறினால், அதிமுக டெப்பாசிட் இழப்பது உறுதி. மார்கண்டேயனால் ஜெர்க்காகி கிடப்பது அதிமுக மட்டுமல்ல, டி.டி.வி.தினகரனின் அமமுகவும் தான்...