அதிமுக எழுச்சி மாநாட்டுக்கு தடையா? வந்தது புதிய சிக்கல்.. அதிர்ச்சியில் இபிஎஸ்..!

மதுரையில் வருகிற 20-ம் தேதி அதிமுக எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாநாட்டில் 10 லட்சம் முதல் 15 லட்சம் பேரை திரட்ட அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். 

AIADMK conference banned.. Petition in the Madurai branch High Court

மதுரையில் அதிமுக நடத்த உள்ள எழுச்சி மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றக் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மதுரையில் வருகிற 20-ம் தேதி அதிமுக எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாநாட்டில் 10 லட்சம் முதல் 15 லட்சம் பேரை திரட்ட அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி காரைக்குடியை சேர்ந்த சேது முத்துராமலிங்கம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

இதையும் படிங்க;- ஜெயிலர் திரைப்படத்திற்கு இலவச டிக்கெட் வழங்கி ரஜினி ரசிகர்களை மாநாட்டிற்கு அழைத்த கடம்பூர் ராஜூ

AIADMK conference banned.. Petition in the Madurai branch High Court

அந்த மனுவில்:- மதுரை மாவட்டம் பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிர்புறத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு நடக்கவுள்ள இடம் மதுரை விமான நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. தினமும் அதிகளவில் விமானங்கள் வந்து செல்கின்றன. தரையிரங்கும் போது மிகவும் தாழ்வான பகுதியில் தான் விமானங்கள் பறக்கும் விமான நிலையத்தை சுற்றிய பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே உள்ளன.

AIADMK conference banned.. Petition in the Madurai branch High Court

மத்திய தொழில்படை பாதுகாப்பு மற்றும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. சுமார் 15 லட்சம் பேர் மாநாட்டிற்கு வருவதாக அதிமுகவினர் கூறுகின்றனர். அன்றைய தினம் விமானங்கள் தரையிரங்குவதில் இடையூறு ஏற்படக்கூடும். மாநாட்டில் பங்கேற்போர் பட்டாசுகள் வெடிக்கும் போது வானில் உயரத்திற்கு பறந்து வெடிக்கும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பட்டாசுகள் வெடிக்க தடை விதித்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக விமான போக்குவரத்து துறையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  எடப்பாடி பழனிசாமியா.? ஓ.பன்னீர்செல்வமா.? ஆட்டுகதையை கூறி பூங்குன்றன் கிளப்பிய புதிய சர்ச்சை..!

AIADMK conference banned.. Petition in the Madurai branch High Court

இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை சுற்றி 20 கி.மீ. தொலைவிற்கு உரிய அனுமதியின்றி குறிப்பிட்ட அளவு உயரத்திற்கு மேல் விளம்பர பலகைகள் கூட வைக்க முடியாது. குறிப்பாக மாநாட்டிற்கு அனுமதி கோரும் முன் மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை. ஆகையால், ஆகஸ்ட் 20ம் தேதி மதுரை பெருங்குடியில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் அதிமுக மதுரை மாநாடு நடைபெறுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios