விரலில் வைக்கப்படும் மை யின் தரம் மோசம்.! போலி வாக்குப்பதிவுக்கு வழிவகுக்கும்-தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்ததன் அடையாளமாக விரலில் வைக்கப்படும் மை யின் தரம் மோசமாக உள்ளதாகவும், இதன் காரணமாக அது போலி வாக்குப்பதிவுக்கு வழிவகுக்கும் என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை புகார் அளித்துள்ளார்.

AIADMK complains to the Election Commission regarding the quality of finger ink used in the Erode election

ஈரோடு இடைத்தேர்தல்- விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் என 77பேர் வேட்பாளராக களத்தில் உள்ளனர்.  ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 25 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 16,497 பேர் மூன்றாம் பாலினத்தினர் 25 பேர் மொத்தமாக 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர்.  இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு இன்று மாலை கொண்டு செல்லப்படவுள்ளது.

AIADMK complains to the Election Commission regarding the quality of finger ink used in the Erode election

தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

இந்தநிலையில் வாக்குப்பதிவின் போது அடையாளத்திற்காக விரலில் வைக்கப்படும் மை தரமானதாக இல்லையென புகார் எழுந்துள்ளது. இது தொர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் தேர்தல் பிரிவு துணை செயலாளருமான இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிஇத்துள்ளார்.  அதில் தேர்தலின் போது வாக்களித்ததன் அடையாளமாக விரலில் வைக்கப்படும் மை யின் தரம் மோசமாக இருப்பதாகவும்,  இதன்  காரணமாக கள்ள வாக்குப்பதிவுக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார். எனவே தரமற்ற மை யை மாற்ற வேண்டும்  என இன்பதுரை வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஈரோடு கிழக்கில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் யார்..? இதுவரை வென்ற கட்சிகள் எது..?
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios