EPS Vs OPS : ஓபிஎஸ் தரப்பில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. இந்தநிலையில், நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஓபிஎஸ் தரப்பில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. 

இதையும் படிங்க : EPS Vs OPS : எல்லாமே முடிஞ்சுபோச்சு.! அதிமுகவை கைப்பற்றும் இபிஎஸ்..தர்ம சங்கடத்தில் ஓபிஎஸ்

இந்தநிலையில், நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து அவர் தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார்.

இதுவரை மைத்ரேயன் ஓபிஎஸ் ஆதரவாளராக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளதால் அவர் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்து உள்ளார். நேற்று ஓபிஎஸ் தரப்பாக இருந்தவர்கள் இன்று காலை பல்டி அடித்துவருகிறார்கள். இது ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் நெருக்கடியை தந்துள்ளது. இந்நிலையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு ஓபிஎஸ் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க : Thalapathy Vijay : எங்களின் ஒற்றை தலைமையே.! அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்.!

நேற்று இரவே ஓபிஎஸ் ஜெயலலிதா சமாதிக்கு செல்வார் என சொல்லப்பட்டது. அவர் செல்லவில்லை. அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதா சமாதியில் ஒப்பாரி வைத்து அழுதனர். அதில் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இன்று மாலைக்குள் ஓபிஎஸ் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு செல்வார் என்று கூறப்படுகிறது. 

இதையும் படிங்க : EPS Vs OPS : அதிமுக பொதுக்குழுவுக்கு போகாதீங்க..உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்.!