அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் பெயர், இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், சென்னை, மெரினாவில் உள்ள, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் கெடுபிடிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் பெயர், இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், சென்னை, மெரினாவில் உள்ள, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் கெடுபிடிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே போட்டி எழுந்துள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பலகட்ட ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்று முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என, அக்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், பரபரப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே, ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் நடத்தினார் பன்னீர்செல்வம். இந்த சம்பவம் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி கொடுத்தது. அதேபோன்ற சம்பவங்கள், மீண்டும் நடந்து விடக் கூடாது என்பதில், போலீசார், பொதுப்பணி துறையினர் உறுதியாக உள்ளனர்.தற்போது, ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எம்.ஜி.ஆர்., நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. எனவே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்திற்குள், அ.தி.மு.க., தொண்டர்கள் நுழைய முடியாதபடி, கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையம் அருகே, பாதுகாப்பு பணிக்கு, போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில், முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் பட்சத்தில், முக்கிய தலைவர்கள் வந்து செல்வதற்காக, சிறப்பு வழிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.