Asianet News TamilAsianet News Tamil

சாலையோர கடையில் டிபன் சாப்பிட்ட அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்.. 234 தொகுதிகளிலும் வெற்றி உறுதி என அதிரடி.

அவர் பிரச்சாரம் செய்யும் வழிநெடுகிலும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல எருக்கஞ்சேரியில் உள்ள சாலையோர தள்ளுவண்டி கடையில் காலை சிற்றுண்டியை பெரம்பூர் பகுதி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து சாப்பிட்டார். 

AIADMK candidate who Break Fast at the roadside shop .. Action to ensure victory in all 234 constituencies.
Author
Chennai, First Published Mar 24, 2021, 4:08 PM IST

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுக கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர் தனபாலன் சென்னை பெரம்பூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தொடர்ந்து பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி பிரச்சாரம் செய்து வரும் என்ன தனபாலன் இன்று எருக்கஞ்சேரி வியாசர்பாடி பகுதிகளில் உள்ள இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். 

AIADMK candidate who Break Fast at the roadside shop .. Action to ensure victory in all 234 constituencies.

அவர் பிரச்சாரம் செய்யும் வழிநெடுகிலும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல எருக்கஞ்சேரியில் உள்ள சாலையோர தள்ளுவண்டி கடையில் காலை சிற்றுண்டியை பெரம்பூர் பகுதி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து சாப்பிட்டார். மேலும் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், பெரம்பூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்க கூடிய கழிவுநீர் கால்வாய்கள் நவீனமயமாக்கும் திட்டம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று உடனடியாக செயல்படுத்தப்படும் என்றார். 

AIADMK candidate who Break Fast at the roadside shop .. Action to ensure victory in all 234 constituencies. 

மேலும், பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரியில் மேலும் பட்டப் படிப்புகளும், பட்ட மேற்படிப்புகள் தொடங்குவதற்கும், அந்த கல்லூரியை நவீனமயமாக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கும், தன்னை இந்த சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கோரினார். 234 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றி  உறுதி செய்யப்பட்ட ஒன்று எனவும் அவர் கூறினார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios