Asianet News TamilAsianet News Tamil

ரூ.25 லட்சத்துடன் பிடிப்பட்ட அதிமுக எம்.பி... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அ.தி.மு.க. எம்.பி. ஏழுமலையின் சூட்கேசில் கட்டுக்கட்டாக ரூ.25 லட்சம் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

AIADMK Arni MP Elumalai
Author
Tamil Nadu, First Published May 18, 2019, 10:24 AM IST

டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அ.தி.மு.க. எம்.பி. ஏழுமலையின் சூட்கேசில் கட்டுக்கட்டாக ரூ.25 லட்சம் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். AIADMK Arni MP Elumalai

ஆரணி தொகுதி அதிமுக எம்.பி ஏழுமலை. இவர் நேற்றிரவு 8.10 மணிக்கு டெல்லியிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் வந்தார். அந்த விமானம் மாலை 5.15 மணிக்கு டெல்லியில் புறப்பட இருந்த நேரத்தில், டெல்லி விமானநிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள்  ஏழுமலை கொண்டு வந்த சூட்கேசை சோதனையிட்டனர். உடமையை ஸ்கேன் செய்யும் போது கட்டு கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இயைடுத்து, சென்னை விமானநிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு டெல்லி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

 AIADMK Arni MP Elumalai

 இதையடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய, எம்.பி ஏழுமலையை தடுத்து நிறுத்தி, அவரது சூட்கேசை சோதனை செய்தனர். அதில் ரூ.25 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அப்போது “இது எனது சொந்த பணம், தனிப்பட்ட தேவைக்காக வங்கியிலிருந்து கொண்டு வந்தேன்”என தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ளாத அதிகாரிகள் வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்த விமான நிலையம்  வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் எம்.பி ஏழுமலையிடம் விசாரணை நடத்தினர். AIADMK Arni MP Elumalai

அப்போது ஏழுமலை எம்.பி. மகளின் படிப்பு செலவுக்காக இந்த பணத்தை கொண்டு வந்ததாக கூறி அதற்கான உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்துள்ளார். இதனையடுத்து ஒரு மணிநேரத்திற்கு பின் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை பணத்தை எடுத்து செல்ல அனுமதித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios