அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம், அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். வேலுர் நாடாளுமன்ற தேர்தலில் குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு தொகுதிகளில் திமுகவை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளோம்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி, ஏ. சி சண்முகத்தின் புதிய நீதி கட்சி, டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னணிக் கழகம், என்.ஆர் தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி என மொத்தம் 13 க்கும் அதிகமான அமைப்புகள் மற்றும் அதன் நிர்வாகிகள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணை ப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். சிறு சிறு கட்சிகளின் ஆதரவை பெரும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அதிமுக அவர்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்கும் எனவும் கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளதால், தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதிமுக- திமுக இடையே நேரெதிர் போட்டி என்ற சூழல் உருவாகி இருப்பதால், கூட்டணியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் சுமார் 13 க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியல் இயக்கங்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

நடிகர் நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் மனித உரிமை காக்கும் கட்சி, ஏ.சி சண்முகம் அவர்களின் புதிய நீதி கட்சி, டாக்டர் சேதுராமன் அவர்களின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், ஜோதி முத்துராமலிங்க தேவர் அவர்களின் பசும்பொன் தேசிய கழகம், முருகன் ஜி அவர்களின் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி, திரு. வேட்டவலம் மணிகண்டன் அவர்களின் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி. ஷேக் தாவுத் அவர்கள் தலைமை வகிக்கும் தமிழ் மாநில முஸ்லிம் லீக், அம்பேத்கர் பிரியன் அவர்கள் நிறுவன தலைவராக விளங்கும் இந்திய தேசிய குடியரசு கட்சி. இடிமுரசு இஸ்மாயில் மாநில பொதுச் செயலாளராக இருக்கும் முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகம், எம்.எஸ் தமிம் அவர்கள் பொதுச்செயலாளராக திகழும் தமிழக ஜனநாயகம் முஸ்லிம் மக்கள் கட்சி.

எஸ்.எஸ்.ஆர் சரவணவேல் அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள செங்குந்தர் அரசியல் அதிகாரம், அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி, உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. அக்கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாளன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம், 3 தொகுதிகள் ஒதுக்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். என்றார். அதேபோல் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம், அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். வேலுர் நாடாளுமன்ற தேர்தலில் குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு தொகுதிகளில் திமுகவை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளோம். சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பரிசீலித்து கூறுவதாக தெரிவித்துள்ளனர். என கூறினார்.
