அஹ்ரஹாரத்து அம்பேத்கர் திருமாவளவன்... ஒரேயடியாக புகழ்ந்து தள்ளிய அம்மா பக்தன்..!
பட்டையும் கொட்டையுமாக செல்கிறாயே எனக் கேட்டார்கள். பட்டையையும், கொட்டையையும் பாதுகாக்கக் கூடிய ஒரே ஆள் அண்ணன் திருமாவளவன் தான் என்றேன்.
அக்ரகாரத்து அம்பேத்கர் திருமாவளவன். ஆன்மீகத்துக்கு எதிரி அல்ல அடிமைதனத்திற்கு எதிரி என பேச்சாளர் மணிகண்டன் திருமாவளவனை போற்றிப்பேசியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனின் 59வது பிறந்த நாள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. அப்போது அவரை வாழ்த்திப்பேசிய கவிஞர் மணிகண்டன், ‘’எங்கே செல்கிறீர்கள் எனக்கேட்டார்கள். பெரியார் திடலுக்கு என்றேன். பட்டையும் கொட்டையுமாக செல்கிறாயே எனக் கேட்டார்கள். பட்டையையும், கொட்டையையும் பாதுகாக்கக் கூடிய ஒரே ஆள் அண்ணன் திருமாவளவன் தான் என்றேன். கொரோனாவில் அவர் பெயரில் உள்ள கிருமிநாசியை ஊற்றிக் கொண்டால் எந்த கிறுமியும் அண்டாதுடா என்றேன். கோவிட்டை விட சக்தி வாய்ந்த ஊசி திருமாவளவன் என்ற ஊசி என்றேன்.
திருமாவளவனை பற்றி அது படித்தவன், அப்படிப்படித்தவன் என்றெல்லாம் எனக்கு வாழ்த்த தெரியாது. நான் நாடோடி மாதிரி, தேசாந்திரி மாதிரி. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஒரு முதலமைச்சர் பக்கத்திலேயே 10 வருஷம் இருந்தவன். நான் அம்மா ஆளு. நான் பயப்பட மாட்டேன். ஏனென்றால் மானமுள்ள தமிழச்சியின் மார்பில் பால் குடித்து வளர்ந்தவன்.ஒரு பேச்சாளருக்கு சரிக்கு சமமாக நாற்காலி கொடுத்து சரியாசனமாக உட்கார வைத்த ஒரே தலைவன் நீதான். நீ அஹ்ரஹாரத்து அம்பேத்கர்.
இனிமேல் உங்களை தமிழ்நாட்டில் உங்களை சாதிய தலைவன் என்று சொல்லக்கூடாது. நீங்கள் சாதித்த தலைவன். நீங்கள் ஆதி த்ராவிடர்களை ஜோதி திராவிடர்களாக மாற்றியவர், மலைவாழ் மக்களை நிலைவாழ் மக்களாக மாற்றியவர்’’ என அவர் பேசினார்.