Asianet News TamilAsianet News Tamil

வந்தோரை வாழ வைக்கும் சென்னையின் வயது 381... புகழ்ந்து தள்ளி ட்வீட் போட்ட முதல்வர் எடப்பாடி..!

வந்தோரை வாழ வைக்கும் சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று. கொரோனா பேரிடரில் இருந்தும் சென்னை விரைவில் மீண்டு வரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Age 381 in Chennai...CM Edappadi Palanisamy wishes
Author
Chennai, First Published Aug 22, 2020, 11:41 AM IST

வந்தோரை வாழ வைக்கும் சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று. கொரோனா பேரிடரில் இருந்தும் சென்னை விரைவில் மீண்டு வரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639 ஆகஸ்ட் 22ம் நாளை ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினமாக கொண்டாடி வருகிறோம்.  பல்வேறு நகரங்களில் வாழ்ந்து வரும் பல கோடி மக்களின் பல்வேறு கனவுகளில் சென்னைக்கு வர வேண்டும் என்ற கனவும் ஒன்று. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இளைஞர்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டால் உடனே வேலை தேட வேண்டும் என்றால் அவர்களுக்கு ஞாபகம் வருவது சென்னை தான். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வசதியையும் கொடுத்து அவர்கள் தங்களுடைய சொந்த ஊர் சென்னை என்று சொல்லும் அளவுக்கு அவர்களை மாற்றிவிடும். 

Age 381 in Chennai...CM Edappadi Palanisamy wishes

இந்நிலையில், சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினத்தையொட்டி  தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!

 

கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித்தந்த சென்னையின் வயது 381. பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை! ” என்று பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios